உங்க ஊர்ல அடிக்கடி பவர் கட் ஆகுதா இது தான் காரணம் அமைச்சர் விளக்கம்!!

1
22
Facebook
Twitter
WhatsApp
Telegram

கடந்த ஒரு மாதமாக தமிழ்நாட்டில் அடிக்கடி பவர் கட் ஆகி கொண்டே இருக்கிறது. அதற்கான காரணத்தை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

தினமும் பவர் கட்:

தமிழ்நாட்டில் தினமும் 5 அல்லது 10 நிமிடங்கள் சில நேரங்களில் அரைமணி நேரம் கூட பவர் கட் ஏற்பட்டு வருகிறது. மறுபடியும் மின்சார தட்டுப்பாடு ஏற்பட்டு விட்டதா என்ற கேள்வி பலரிடம் வந்தது. கடந்த அதிமுக ஆட்சியில் இந்த பிரச்சனை இல்லாமல் இருந்தது. மறுபடியும் பவர் கட் அடிக்கடி ஆவது மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. சில நேரங்களில் பராமரிப்பு பணிக்காக பவர் கட் செய்வர். ஆனால் ஒருநாளில் அடிக்கடி மின்சார தடை ஏற்படுவதால் மக்கள் குழம்பி பொய் இருந்தனர்.

Must Read: உங்க கட்சி அமைச்சர்களை முதல்ல அடக்கி வைங்க – ஸ்டாலினுக்கு எல்.முருகன் அறிவுறுத்தல்

ஏன் இந்த தடை:

பவர் கட்

இப்படி பவர் கட் ஆகும்போதும் எல்லோரும் மின்சார அலுவகத்திற்கு அழைத்து என்ன பிரச்னை என்று கேட்கும் போது ஒரே வார்த்தையில் மின் கம்பத்தில் பிரச்னை என்று பதில் கூறியிருப்பர். ஒருநாளைக்கு அடிக்கடி தடை ஏற்படும் போது இத்தனை முறையா மின்கம்பத்தில் பிரச்னை வரும் என்று கேள்வி நமக்கு எழும்.

Must Read: புது ரேஷன் கார்டு அப்ளை பண்ணியிருக்கிங்களா!! உங்களுக்கு குட்நியூஸ்!!

அமைச்சர் விளக்கம்:

மின்சார தடைக்கான விளக்கத்தை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். அவர் கூறும்போது கடந்த டிசம்பர் மாதத்திலிருந்தே மின்சார பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளவில்லை. அதாவது கடந்த 7 மாதங்களாக எந்த பணியும் செய்யப்படவில்லை. பராமரிப்புக்கென்று மாதம் தோறும் ஒரு நாள் முழு பவர் கட் செய்யப்படும். ஆனால் இந்த நாட்களில் ஒரு தடவை கூட இந்த பவர் கட் செய்யப்படவில்லை. இதனால் சின்ன சின்ன கோளாறுகள் மின்கம்பத்தில் ஏற்படுகிறது. அந்த காரணத்தினால் தான் தற்பொழுது அடிக்கடி மின்கோளாறு காரணமாக பவர் கட் செய்யப்படுகிறது.

இனிமேல் பவர் கட் இருக்குமா:

பவர் கட்

போர்க்கால அடிப்படையில் சில பராமரிப்பு பணிகளை மட்டுமே கடந்த 6 மாதங்கள் செய்யப்பட்டது. அதனால் தான் சின்ன பிரச்சனைகள் ஏற்படும் போது அதை சரி செய்வதற்கு பவர் செய்யப்படுகிறது. கொரோனா தொற்றின் காரணமாக தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. எனவே இந்த பராமரிப்புக்களை செய்வதற்கு தற்காலிகமாக தடை விதிக்கப்படுகிறது என்று கூறினார். எனவே இனிமேல் ஊரடங்கு முடியும் வரை பவர் கட் தமிழகத்தில் இருக்காது என்றும் தெரிவித்தார்.

இது போன்ற செய்திகளுக்கு எங்களது இணையதளத்தை Follow செய்யுங்கள் – times tamil

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here