![sekar babu](/wp-content/uploads/2021/06/sekar-babu-696x316.jpg)
சென்னை சாலிகிராமத்தில் உள்ள வடபழனி முருகன் கோவிலுக்கு சொந்தமான இடத்தின் ஆக்கிரமிப்பை அகற்றினார் அமைச்சர் சேகர் பாபு.
செய்தி சுருக்கம்:
1. வடபழனி முருகன் கோவில் இடம் ஆக்கிரமிப்பு.
2. வாகனத்தை நிறுத்துவதற்கு கட்டணம் வசூல்
3. இது வெறும் ட்ரைலர் தான், மெயின் பிக்சர் இனிமேல் தான்
வடபழனி முருகன் கோவில்:
![Vadapalani murugan temple](https://media-cdn.tripadvisor.com/media/photo-s/16/f6/6a/b2/aerial-view.jpg)
![Vadapalani murugan temple](https://media-cdn.tripadvisor.com/media/photo-s/16/f6/6a/b2/aerial-view.jpg)
சென்னை சாலிகிராமத்தில் முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமாக சுமார் 5.5 ஏக்கர் நிலம் இருக்கிறது. இதனுடைய மதிப்பு ரூபாய் 250 கோடிக்கும் அதிகம். இந்த இடத்தில் மகளிர் விடுதி ஒன்றும் உள்ளது. தற்போது அவை செயல்படாமல் இருக்கிறது. மேலும் சில இடங்கள் குப்பைகளை கொட்டுவதற்கு கழிவுகளை போடுவதற்கும் பயன்படுத்தி வந்தனர்.
வாகனத்தை நிறுத்துவதற்கு கட்டணம்:
இந்த இடத்தை சிலர் ஆக்கிரமித்து சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வந்தனர். மேலும் அந்த இடத்தை வாகனம் நிறுத்தும் இடமாக மாற்றி அதற்கு கட்டணத்தை வசூலித்து வந்தனர். அந்த பகுதி மக்கள் நீண்ட நாட்களாக இந்த இடத்தின் அக்கிரமிப்புக்குகளை அகற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
பறந்து சென்ற அமைச்சர்:
![vadapani murugan temple](https://tamil.oneindia.com/img/2021/06/ministersekarbabu1-1622819804.jpg)
![vadapani murugan temple](https://tamil.oneindia.com/img/2021/06/ministersekarbabu1-1622819804.jpg)
இந்நிலையில் தற்போது பதவியேற்று இருக்கும் திமுக அரசு அறநிலையத்துக்கு சொந்தமான இடங்களை மீட்போம் என்று அமைச்சர் சேகர் பாபு தெரிவித்து இருந்தார். இந்த புகார் அவர் கவனத்திற்கு சென்றதும் இன்று காலை கமிஷனர் சுதீப் சிங்க் பேடி, அறநிலையத்துறை அதிகாரி குமரகுருபரன், வடபழனி கோவில் துணை கமிஷனர் சித்ரா தேவி அந்த இடத்திற்கு சென்றனர். இவர்களோடு 100 போலிஸ், வடபழனி உதவி கமிஷனர் ரவீந்திரன், இன்ஸ்பெக்டர் புருசோத்தமன் மற்றும் பராக் அப்துல்லா சென்றனர்.
இது வெறும் ட்ரைலர் தான்:
இவர்கள் தலைமையில் சென்ற குழு இடத்தை ஆக்கிரமிப்பு செய்தவர்களிடமிருந்து மீட்டது. பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர்,” திமுக பொறுப்பேற்று கொண்டதற்கு பின் அறநிலத்திற்கு சொந்தமான இடங்களை மீட்டு வருகிறோம். ஏற்கனவே திருச்சியுள்ள ஸ்ரீரங்கம் கோயிலின் ஆக்கிரப்பை மீட்டோம். தற்போது மீட்டு இருக்கும் நிலம் 5.5 ஏக்கர் மற்றும் இதன் மொத்த மதிப்பு 250 கோடி ரூபாய். மேலும் அவர் கூறும்போது இது வெறும் ட்ரைலர் தான். இன்னும் மெயின் பிக்சர் இருக்கிறது. இது போல பல தொடரும்” என்று கூறினார்.
இது போன்ற செய்திகளுக்கு எங்களது இணையதளத்தை Follow செய்யுங்கள் – Times Tamil