டெக்
சியோமி நிறுவனம் mi power bank boost pro 30000mah என்கிற பவர் பேங்கை அறிமுகப்படுத்துகிறது. பல்வேறு சிறப்பம்சம்ங்கள் கொண்ட இந்த பவர் பேங்கை பற்றி காண்போம்.
mi power bank boost pro 30000mah திறன்கொண்ட பேட்டரியை கொண்டது. மே 21 வெளியிட உள்ளதாக சியோமி நிறுவனம் தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. இது பிளிப்கார்ட் வழியாக விநியோகிக்கப்படும் என அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
சியோமி இந்த பவர் பேங்கை போன மார்ச் மாதம் க்ரவுட் பண்டிங் பிளாட்பாரம் வழியாக வெளியிட்டிருந்தது. அதில் 3,499 ரூபாய்க்கு விற்கப்பட்ட இந்த பவர் பேங்க் 1,999 ரூபாய்க்கு விற்க உள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால் உண்மையான விலை மே 21 ஆம் தேதி வந்தால் தான் தெரியும்.
சிறப்பம்சங்கள்:
- 30000mah லித்தியம் பாலிமர் பேட்டரியை கொண்டுள்ளது.
- 16 அடுக்கு மேம்பட்ட சிப் பாதுகாப்பை கொண்டது.
- 18w பாஸ்ட் சார்ஜிங் வசதியை கொண்டது.
- ஒரே நேரத்தில் 3 சாதனங்களை சார்ஜ் செய்யலாம்.
- 3 அவுட்புட் கொண்டது ( 2 எ டைப் / 1 சி டைப் )
- 3.0 அவுட்புட் பாஸ்ட் திறன் கொண்டது.
- டைப் சி யிலிருந்து டைப் சி க்கு கனெக்ட் செய்யலாம்.
இவ்வளவு சிறப்பான அம்சங்களை கொண்ட mi power bank boost pro 30000mah பயனடைங்க !!