கேரளா மாநிலத்தில் நான்கு மாவட்டங்களில் கொரோனா பரவலை தடுக்க மும்மடங்கு ஊரடங்கு போடப்பட்டுள்ளது. கொரோனா தொற்று அதிகம் உள்ள மாவட்டங்களில் மட்டும் மும்மடங்கு ஊரடங்கு அமுலுக்கு வந்தது.
- அதன் அடிப்படையில் எர்ணாகுளம், திருச்சூர், திருவனந்தபுரம் மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் நேற்றிரவு முதல் இவுரடங்கு அமலுக்கு வந்தது.
- அப்பகுதியில் மாளிகைப் பொருட்கள்கள், காய்கறி, உணவுப்பொருட்கள், பழங்கள், பால், இறைச்சி, மீன், கால்நடை தீவனங்கள் விற்கும் கடைகள் மற்றும் பேக்கரிகள் ஒருநாள் விட்டு ஒருநாள் மதியம் 12 மணி வரை திறந்து வைக்கலாம் என்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
- இந்த மாவட்டங்களுக்குள் உள்ளே செல்ல மற்றும் வெளியே செல்ல அரசின் இணையத்தில் இ பதிவு பெற வேண்டும்.
- அதேபோல் செய்தியாளர்கள் இந்த மாவட்டங்களுக்கு செல்ல காவல்துறையிடம் சிறப்பு அட்டைப் பெற வேண்டும்.
இந்த நான்கு மாவட்டங்களில் எல்லா எல்லைகளும் மூடப்பட்டு அணைத்து இடத்திலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். வாகனங்களில் தேவையில்லாமல் சுற்றி திரிபவர்களை கண்காணிக்க எல்லைகளில் அதிக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.