98 ரூபாய்க்கு புதிய Recharge பிளான் வாடிக்கையாளரை கவர திட்டம்!!

0
26
Facebook
Twitter
WhatsApp
Telegram

ஜியோ நிறுவனத்தால் 98 ரூபாய்க்கு புதிய ரிச்சார்ஜ் பிளானை கொண்டுவந்துள்ளது. இது புது பிளான் கிடையாது. கடந்த வருடம் இந்த பிளான் நிறுத்தப்பட்டது. மீண்டும் வாடிக்கையாளரை கவர அறிமுகம் செய்கிறது ஜியோ.

புது Recharge அறிமுகம்:

jio new recharge plan times tamil.

ஜியோ நிறுவனம் புது புது பிளான்களை அறிமுகம் செய்யும் போது சில பிளான்களை நிறுத்துவதை வாடிக்கையாக கொண்டுள்ளது. ஏனென்றால் புது பிளானை ப்ரமோட் செய்வதற்கு சில நல்ல பிளான்களை நிறுத்துவது அவசியம். அதன்படி 98 ரூபாய் ரிச்சார்ஜ் பிளானை ஜியோ நிறுவனம் நிறுத்தியது. தற்போது கொரோனா பரவல் நாடு முழுவதும் பரவ தொடங்கியதால் சில புது பிளான்களை அறிமுகம் செய்து வருகிறது ஜியோ நிறுவனம். அதன்படி மீண்டும் 98 ரூபாய் பிளானை கொண்டுவந்துள்ளது.

98 ரூபாய் ரிச்சார்ஜ் பிளான்:

இந்த 98 ரூபாய் ரிச்சார்ஜ் செய்யும் பொழுது வாடிக்கையாளருக்கு அன்லிமிடெட் கால் பேசும் வசதி வழங்கப்படுகிறது. மேலும் தினமும் 1.5 GB இன்டர்நெட் வசதியும் வழங்குகிறது இந்த பிளான். இதனுடைய காலஅளவு 14 நாட்களை தருகிறது ஜியோ நிறுவனம். குறைந்த நாட்கள் வேலிடிட்டி என்றாலும் இது சிறந்த பிளானாக கருதப்படுகிறது.

Read More: உருமாறிய கொரோனா வகைக்கு புதிய பெயர்களை அறிவித்தது WHO!!

ஆனால் கடந்த வருடம் இந்த பிளானில் 28 நாட்கள் வாலிட்டியுடன் அன்லிமிடெட் கால் பேசும் வசதியும் தினமும் 2 Gb இன்டர்நெட் வசதியும் வழங்கியது. மேலும் இதன் மூலம் ஜியோ வழங்கும் addonஐ இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். உதாரணமாக Jio சினிமா, Jio நியூஸ், Jio செக்யூரிட்டி மற்றும் Jio கிளவுட் போன்ற வசதிகளை பெற்றுக்கொள்ளலாம்.

யாருக்கெல்லாம் பொருந்தும்:

இந்த ஜியோ ரூ.98 பேக் அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும். மேலும் இவற்றை மை ஜியோ அப்ப்ளிகேஷன் மூலமும் ரிச்சார்ஜ் செய்து கொள்ளலாம். மேலும் இந்த பிளானில் தினமும் 100 எஸ் எம் எஸ் வழங்கப்படுகிறது. மேலும் IUC இல்லாமல் வரம்பற்ற கால்களை மேற்கொள்ளலாம். இந்த புதிய பிளான் மூலம் குறைந்த நாட்களில் அதிக அழைப்புகளை மேற்கொள்பவர்களுக்கு இந்த பிளான் வசதியாக இருக்கும்.

இலவச நிமிடங்கள்:

ambani jio launched new recharge plan

ஏற்கனவே ஜியோ நிறுவனம் கொரோனா தொற்றினால் மக்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்று எண்ணி இந்த நாட்களில் அவர்களுக்கு இலவச நிமிடங்களை அறிவித்தது. அதன்படி எந்த ரிச்சார்ஜ் செய்யாமல் 300 நிமிடத்திற்கு அழைப்புகளை மேற்கொள்ளலாம். இதன் மூலம் 30 நாட்களுக்கு தினமும் 10 நிமிடங்கள் இலவச கால்களை பேசலாம். இந்த கடினமான சூழிநிலையில் மக்களுக்கு உதவியாக இருக்கும் என்று ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது. உதராணமாக ஒரு வாடிக்கையாளர் 149 க்கு ரிச்சார்ஜ் செய்யும் போது கூடுதல் பணம் இல்லாமல் மறுபடியும் 149க்கு ரிச்சார்ஜ் செய்யப்படும்.

இது போன்ற பல்வேறு செய்திகளுக்கு எங்களது இணையதளத்தை Follow செய்யுங்கள்times tamil

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here