சோழர் பரம்பரையில் ஒரு லண்டன் தாதா- ஜகமே தந்திரம் ட்ரைலர் வெளியீடு

0
28
Facebook
Twitter
WhatsApp
Telegram
jagame thanthiram

ஜகமே தந்திரம் திரைப்படத்தின் ட்ரைலர் இன்று வெளியாகி இருக்கிறது. இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த படம் வருகிற ஜூன் 18ம் தேதி நெட்பிலிக்ஸில் வெளியாகிறது.

ட்ரைலர்:

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி நடிக்க ஜகமே தந்திரம் படம் எடுக்கப்பட்டது. படம் எடுத்து அநேக நாட்கள் ஆகிவிட்டது. கடந்த ஆண்டு ஏற்பட்ட கொரோனா பரவலினால் இத்திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி போனது. வருகிற ஜூன் 18ம் தேதி இந்த படம் நேரடியாக OTT தளமான நெட்பிலிக்ஸில் ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன் படத்தின் ட்ரைலர் ஜூன் 1 அன்று வெளியிடப்படும் என்று அறிவிக்கபட்டு இருந்தது. அதன்படி இன்று படத்தின் ட்ரைலர் வெளியிடப்பட்டு இருக்கிறது.

படத்தில் என்ன பிரச்னை:

ஜகமே தந்திரம்

ஜகமே தந்திரம் திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீஸ்க்கு தயாராகும் போது படத்தின் தயாரிப்பாளர் படத்தை OTT தளத்தில் வெளியிட போவதாக அறிவித்தார். அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து இந்த படம் திரையரங்கில் வெளியாவதைத்தான் நான் விரும்புகிறேன் என்று தனுஷ் தெரிவித்தார். இதனால் படம் வெளியாவதில் வெகுநாட்கள் பிரச்னை இருந்து வந்தது. இறுதியில் OTT தளமான நெட்டபிலிக்ஸில் வெளியாவது உறுதியானது. வருகிற ஜூன் 18 அன்று படம் நெட்பிலிக்ஸில் வெளியாகிறது.

ட்ரைலர் எப்படி இருக்கு:

படம் ஒரு காங்ஸ்டர் படம் என்று கண்டிப்பாக சொல்லலாம். படம் முழுவதும் லண்டனில் எடுக்கப்பட்டுள்ளது. முக்கிய கதாபாத்திரத்தில் கலையரசன் நடித்துள்ளார். ட்ரைலர் முழுக்க துப்பாக்கி மற்றும் ரத்தமாக உள்ளது. ஆனால் ரசிகர்கள் இந்த ட்ரைலரை பார்த்து வருத்தமடைந்தாக சொல்லப்படுகிறது.

Read More: 98 ரூபாய்க்கு புதிய Recharge பிளான் வாடிக்கையாளரை கவர திட்டம்!!

தனுஷ்:

தனுஷ் கடைசியாக நடித்த கர்ணன் படம் மிக பெரிய வெற்றியை பெற்றது. இந்நிலையில் இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு கூடியுள்ளது. ரசிகர்கள் மத்தியிலும் மற்றும் வசூல்ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. ஜகமே தந்திரம் முற்றிலும் மாறுபட்ட கதையை கொண்டது. இந்த படம் ஒரு காங்ஸ்டர் படம் என்பதால் வித்தியாசமான அனுபவத்தை தரும்.

ட்விட்டரில் வெளியீடு:

ஜகமே தந்திரம்

ஜகமே தந்திரம் படத்தின் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் படத்தின் ட்ரைலரை ட்விட்டரில் வெளியிட்டு படத்திற்கு ப்ரமோஷன் செய்துள்ளார். அதே போல் ஆரம்பத்திலிருந்தே படத்தை திரை அரங்கில் வெளியிட விரும்பிய தனுஷ், தற்போது படம் OTT யில் வெளியானாலும் படத்தின் ட்ரைலரை ட்விட்டரில் ஷேர் செய்துள்ளார்.

அடுத்த படம்:

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் துருவ் விக்ரமை வைத்து அடுத்த படத்தை இயக்க இருக்கிறார். அவருடைய ரசிகர்கள் ட்விட்டரில் அந்த படத்தின் அப்டேட் ஐ கேக்கிறார்கள். ஒருவழியாக ஜகமே தந்திரத்தின் பட பிரச்சனை முடிவடைந்து ஜூன் 18 அன்று வெளியாவது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.

இது போன்ற செய்திகளுக்கு எங்களது இணையதளத்தை Follow செய்யுங்கள்times tamil

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here