![https _s3-images.ladbible.com_s3_content_f48a725960b982a8750e8deb84ec9c82](/wp-content/uploads/2021/06/https-_s3-images.ladbible.com_s3_content_f48a725960b982a8750e8deb84ec9c82-696x392.jpg)
இத்தாலி நாட்டைச் சேர்ந்த சிலை வடிவமைப்பாளர் தான் சால்வாட்டோரே குரவ், இவர் சிலை வடிப்பதில் திறமையானவராம். இவர் உருவாக்கிய சிற்பத்தை ஏலத்தில் வாங்க போட்ட போட்டி ஏற்படுமாம். அத்தகைய பெருமை வாய்ந்தவர் தான் ஒரு படத்தில் வடிவேலு சாமி தெரிகிறதா? யாருடைய பொண்டாட்டி பத்தினியோ அவங்க கண்ணனுக்கு தான் தெரியும் என்று சொல்லுவார். அதே பாணியை எடுத்து டிங்கரிங் பார்த்து இல்லாத சிலைக்கு 13 லட்சம் விலைக்கு விற்றுள்ளார்.
எங்கய்யா சிலையை காணோம்? :
சிலை சிற்பி சால்வாட்டோரே குரவ் போன சில தினங்களுக்கு முன்பு “ஐ சோனா” என்ற தலைப்பில் ஒரு இல்லாத சிலையை வடிவமைத்திருப்பதாக சொல்லி ஏலம் விடுவதாக தெரிவித்தார். ஆர்ட் – ரைட் என்கிற இத்தாலியின் ஏல நிறுவனம் இந்த ஏலத்தை தொடங்கியது. சால்வாட்டோரே குரவ் வடிவமைத்த சிலையை ஏலத்தில் எடுக்க வந்தவர்கள் அதை பார்த்ததும் ஆச்சர்யத்தில் மூழ்கினர். எப்பபோதுமே ஏலத்திற்கு விடப்படும் சிலைகள் பாதுகாப்பிற்கும், தூசிகள் படாமலிருக்கவும் கண்ணாடியில் வைப்பது வழக்கம். ஆனால் இவர் வடித்த சிலை உள்ள இடத்தில வெறும் கண்ணாடி மட்டுமே இருந்ததை பார்த்து சிலையை தேடிய சம்பவம் நடந்துள்ளது.
![Immaterial' Sculpture Sells for 15,000 Euros | IE](https://inteng-storage.s3.amazonaws.com/img/iea/QlO7DkpQG7/sizes/invisible-sculpture_md.jpg)
![Immaterial' Sculpture Sells for 15,000 Euros | IE](https://inteng-storage.s3.amazonaws.com/img/iea/QlO7DkpQG7/sizes/invisible-sculpture_md.jpg)
இது “இம்மெட்டிரியல்” சிலை :
பின்னர் வ்நதவர்கள் அந்த சிலைக்கு அருகில் உள்ள விவரத்தை படித்த போது தான் புரிஞ்சிருக்கு. இந்த சிலையை விடிவமைத்தவர் இந்த சிலை கண்ணிற்கு தெரியாத சிலை என பொறிக்கப்பட்டிருந்தது. இந்த சிற்ப கலைக்கு “இம்மெட்டிரியல்” என்பதாகவும் எதுவுமே இல்லாமல் உள்ளதை வைத்து வடிவமைத்துள்ளதாக கூறியுள்ளார். இப்ப புரிகிறதா நான் மேலே சொன்ன மாதிரி என் கிணத்த காணோம்னு வடிவேல் தேடுன மாதிரி தேடிருக்காங்க பார்வையாளர்கள்.
படிக்க கிளிக் செய்ங்க: மொபைல் நம்பர் இல்லையா? ஆதார் பதிவிறக்கம் எளிதாக செய்யலாம்!! – டிப்ஸ் இதோ
13 லட்சம் சிலையின் மதிப்பு :
இந்த மாயசிலை ஏலத்தின் ஆரம்பத்தில் 7,000 அமெரிக்க டாலர் முதல் 11,000 அமெரிக்க டாலர் என்ற மதிப்பில் விற்பனை தொகையாக கூறப்பட்டது. பின்னர் இறுதியாக 18,300 அமெரிக்க டாலருக்கு ஏலத்திற்கு விற்கப்பட்டுள்ளது எனவும், அதன் இந்திய ரூபாயின் மதிப்பு படி ரூ 13.38 லட்சமாகும். இதை வாங்கியவர் யாரோ ஒரு புண்ணியவான். அவர் யாரென்று தகவல் இல்லை. ஆனால் சிலையை வாங்கியவருக்கு சான்றிதழையும் கொடுத்துள்ளனர்.
![SALVATORE GARAU | K-ta Salguero | Flickr](https://live.staticflickr.com/2899/14267327461_ebe34a56d9_b.jpg)
![SALVATORE GARAU | K-ta Salguero | Flickr](https://live.staticflickr.com/2899/14267327461_ebe34a56d9_b.jpg)
இப்படித்தான் உருவாக்குனராம் :
இந்த சிலையை வடிவமைத்த சால்வாட்டோரே குரவ் கூறும்போது ” இந்த சிலையை வெற்றிடத்தில் உள்ள சக்திகளை ஒரு பார்ட்டிக்கள்லாக உருவத்தை மாற்றி சிற்பம் வடித்துளேன் எனக் கூறியுள்ளார். இந்த சிலையை அவர் தனது வலைதளபக்கமான இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளதை கீழே கொடுத்துளோம்.
இது போன்ற செய்திகளுக்கு எங்களது இணையதளத்தை Follow செய்யுங்கள் – Times Tamil