5 interesting facts – Series 1- பால் குடித்தா நெஞ்சுவலி வரும்!!

5 Amazing Interesting facts in the world

1
63
Facebook
Twitter
WhatsApp
Telegram
interesting facts

உலகத்தில் நடந்த ஆச்சர்யமான மற்றும் நாம் நம்ப முடியாத உண்மையிலே நடந்த சம்பவங்களை இந்த பதிவின் மூலம் பார்க்க போகிறோம். இது ஏன் இப்படி நடந்தது? இப்டிலாம் இது நடக்குமா? என்று வாயில் விரல் வைக்க கூடிய சம்பவங்களை உங்களுக்கு தொகுத்து வழங்குகிறோம்.

1. சப்பாத்திக் கள்ளியிலிருந்து லெதர்:

interesting facts

உலகம் முழுவதும் லெதர் ஷூ, லெதர் செருப்பு, லெதர் ஜாக்கெட் இவை எல்லாம் எங்கிருந்து வருகிறது என்று நமக்கு தெரியும். மிருகங்களை கொன்று அவற்றின் தோலிலிருந்து தான் லெதர் பொருட்கள் எல்லாம் தயாரிக்கின்றனர். ஆனால் டெக்ஸாஸில் இருக்கும் இரண்டு சகோதரர்கள் இதற்கு எதிராக விலங்குகளை கொன்று லெதர் எடுப்பதற்கு பதிலாக தாவரத்திலிருந்து அதாவது சப்பாத்திக்கள்ளி தாவரத்திலிருந்து தரமான லெதரை தயாரித்து வருகின்றனர். Adrián López Velarde and Marte Cázarez இவங்க ரெண்டு பேரும் தான் இதை கண்டுபிடித்துள்ளனர்.

2. கூகிள் பெனிபிட்ஸ்:

google benefits - interesting facts

கூகிள் நிறுவனம் நமக்கு நல்லாவே தெரியும். அவர்களிடம் வேலை பார்ப்பவர்களை அவர்கள் நன்றாக பார்த்து கொள்வார்கள் என்று நாம் கேள்விப்பட்டு இருப்போம். மேலும் அங்கு வேலை பார்ப்பவர் இறந்து விட்டார் என்றால், அவருடைய மனைவிக்கு அந்த இறந்த நபர் வாங்கும் சம்பளத்தில் பாதியை மாதம் தோறும் கொடுப்பார்களாம். மேலும் இறந்த நபருக்கு 19 வயதுக்கு கீழ் பிள்ளைகள் இருக்கும் போது அவர்களின் செலவுக்கு மாதம் தோறும் 1000 டாலர் கொடுப்பார்களாம்.

Must Read: இந்தியாவிலேயே மிகவும் மோசமான மொழி கன்னடமா? கொதித்த கர்நாடக மக்கள்

3. பால் குடித்தா நெஞ்சுவலி வரும்:

milk drinking- interesting facts

நமக்கு எல்லாம் பால் குடித்தால் நல்லது என்று கேள்வி பட்டு இருப்போம். ஆமாம் அதுவும் உண்மைதான். ஆனால் அதை அதிக அளவு எடுத்து கொள்ளும் போது நெஞ்சு வலி வருவதற்கான வாய்ப்பு அதிகமாம். அதுவும் 40 வயதுக்கு மேல் பாலை அதிகளவு எடுத்துக்கொள்ள கூடாதாம். ஏனென்றால் 40 வயதுக்கு மேல் தான் நெஞ்சுவலி வருவதற்கான வாய்ப்பு அதிகமாம். பாலை அதிகம் குடிக்கும் போது அதில் சுரக்கும் ஹார்மோன் ஒரு கட்டத்தில் நெஞ்சு வலி வருவதற்கான வழியை ஏற்படுத்திவிடுமாம்.

4. ஒருமுறை கூட சூரியனை சுத்தாத கோள்:

Pluto and the Solar System interesting facts

நமது பூமி இதுவரை சூரியனை பல கோடி முறை சுத்தி வந்துள்ளது. ஆனால் இதுவரை ஒருமுறை கூட சுத்தி வராத கோள் எது தெரியுமா? புளூட்டோ குறுங்கோள் தான் இதுவரை ஒருமுறை கூட சுத்தி வரவில்லை. 1930ம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்ட புளூட்டோ குறுங்கோள் சூரியனை சுற்றி வர 248 ஆண்டுகள் எடுத்து கொள்ளுமாம். அதன்படி பார்த்தால் இதுவரைக்கும் 81 ஆண்டுகள் மட்டுமே ஆகியுள்ளது. இன்னும் 160 வருடங்கள் (2178ம் ஆண்டு) கழித்து தான் புளூட்டோ குறுங்கோள் சூரியனை ஒருமுறை சுற்றி வரும்.

5. வானிலை அறிக்கை சொல்ல இவ்வளவு பார்முலாவா:

 Weather Forecast - Interesting facts

நாமெல்லாம் எப்போது மழை வரும் என்று வீட்டுலுள்ள தொலைக்காட்சியை பார்த்து தெரிந்து கொள்வோம். ஆனால் அதை எப்படி சொல்கிறார்கள் தெரியுமா? ஒரு வானிலை அறிக்கை சொல்வதற்கு 1 மில்லியனுக்கும் அதிகமான கணக்கு பார்முலாவை சரி செய்ய வேண்டுமாம். இதை மனிதன் செய்யமாட்டான். கணினி இதை செய்து வானிலை அறிக்கையை தெரிவிக்கும். இருத்தலாலும் 1 மில்லியன் பார்முலா அதிகம் தான்.

இது போன்ற செய்திகளுக்கு எங்களது இணையதளத்தை Follow செய்யுங்கள்Times Tamil

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here