5 interesting facts around the world – Series 2 கோழியை அர்ரெஸ்ட் செய்த போலீஸ்!!

0
11
Facebook
Twitter
WhatsApp
Telegram
interesting facts

உலகத்தில் நடந்த ஆச்சர்யமான மற்றும் நாம் நம்ப முடியாத உண்மையிலே நடந்த சம்பவங்களை இந்த பதிவின் மூலம் பார்க்க போகிறோம். இது ஏன் இப்படி நடந்தது? இப்டிலாம் இது நடக்குமா? என்று வாயில் விரல் வைக்க கூடிய சம்பவங்களை உங்களுக்கு தொகுத்து வழங்குகிறோம்.

1. 3000 ஆண்டுகளுக்கு முன்பே வாழ்ந்த மைக்கல் ஜாக்சன்:

interesting facts

மேல உள்ள படத்தை பாருங்கள் அச்சு அசலாக மைக்கல் ஜாக்சன் போல உள்ள சிலை. ஆனால் அது மைக்கல் ஜாக்சன் இல்லை. 3000 ஆண்டுகளுக்கு முன் சிகாகோ நகரத்தை ஆண்ட மன்னனுடைய சிலை. 3000 ஆண்டுகளுக்கு முன்பே மைக்கல் ஜாக்சன் போல ஒருவர் வாழ்ந்துள்ளார்.

2. 50 கோடி ரூபாய் பந்து:

Interesting facts

50 கோடி ரூபாய்க்கு அப்படி என்னங்க இருக்கு இந்த பந்துல என நீங்க எல்லாம் கேக்கலாம். இந்த பந்துல மொத்தம் 5700 வைரக்கற்கள் பதித்து இருக்கிறார்கள். 18 காரட் தங்கத்தால் சுத்தி லைனிங் கொடுத்து இருக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் இந்த பந்தை கீதாஞ்சலி என்ற நிறுவனம் தான் தயாரித்து இருக்கிறார்கள்.

3. கோழியை அர்ரெஸ்ட் செய்த போலீஸ்:

என்னது கோழியை அர்ரெஸ்ட் பண்ணிட்டாங்களா. தெலுங்கானா மாநிலத்துல கோழிச்சண்டை மிகவும் பிரபலம். கோழியின் காலில் கத்தியை கட்டிவிட்டு தான் சண்டை போடுவார். அப்படி போடும் போது பறந்து வந்த கோழி கால் தெரியாமல் அவருடைய உரிமையாளருடைய கழுத்தில் பட்டுவிட்டது. அதிலிருந்த கத்தி அவருடைய கழுத்தை அறுத்துவிட்டது. அவர் அந்த இடத்திலேயே இறந்துவிட்டார். இதற்கு தான் போலீஸ் கோழி மற்றும் அதில் கலந்து கொண்ட எல்லோரையும் ஜெயிலில் போட்டுவிட்டது.

4. ஆஸ்ட்ரிச் மிதிச்சா நீ செத்த:

Interesting facts

தீக்கோழி நாமெல்லாரும் கேள்வி பட்டிருப்போம். அந்த கோழியை வேட்டையாடுவது மிக கடினம். ஒருவேளை எதாவது ஒரு மிருகம் அதை வேட்டையாட வரும் போது இந்த கோழி ஒரு மிதித்தான் மிதிக்குமாம். வேட்டையாட வந்த முருகம் அந்த இடத்திலேயே இறந்து விடுமாம். ஏனென்றால் ஆஸ்ட்ரிச்சின் மிதி ரொம்ப பவராக இருக்குமாம்.

5. ஏன் மாத்திரை நடுவுல கோடு போட்டு இருக்காங்க:

நாம மாத்திரை பார்த்து இருப்போம். ஒரு மாத்திரையில் கோடு இருக்கும். ஒரு மாத்திரையில் கோடு இருக்காது. ஒரு சில மாத்திரை டியூபில் இருக்கும். இதுக்கு என்ன காரணம் தெரியுமா?

Interesting facts

கோடு உள்ள மாத்திரை:

கோடு உள்ள மாத்திரை எடுத்துக்கொண்டால் ஒருவேளை அந்த மாத்திரையின் அளவு 100 MG என்று எடுத்து கொண்டால். அதனுடைய பாதி 50 MG ஆகும். ஒருவேளை உங்களுக்கு பாதிப்பு குறைவாக இருந்தால் நீங்கள் பாதி மாத்திரை எடுத்து கொள்ளலாம். அப்பொழுது இதில் பாதியை அப்படியே உடைத்து மாத்திரையை சாப்பிடலாம்.

கோடு போடாத மாத்திரை:

ஏன் இந்த மாத்திரையில் கோடு இல்லை என்றால் இந்த மாத்திரையை அப்படியே சாப்பிட வேண்டும். உடைத்து சாப்பிடக்கூடாது. அதற்காகத்தான் இந்த மாத்திரையில் கோடு இல்லை.

டியூப் மாத்திரை:

சில மாத்திரைகளை நாம் பார்த்து இருப்போம். அது டியூப் வடிவில் இருக்கும் அதில் உள்ள மருந்து பவுடர் ஆக இருக்கும். நீங்க கேக்கலாம் ஏன் இந்த மாத்திரையை சாதாரணமான மாத்திரை போல தயாரிக்கலாமே என்று, ஆனால் இதற்கு ஒரு காரணம் உண்டு. நாம் சாப்பிடும் மாத்திரை நம் உடலில் சென்று கரைவதற்கு நேரம் எடுக்கும், ஆனால் இதுபோல பவுடர் வடிவில் உள்ள மாத்திரையை சாப்பிடும் போது சீக்கிரம் கரைந்து விடும். எந்த நோய்க்கு உடனடியாக பலன் கிடைக்க வேண்டுமோ அதற்கு மட்டும் தான் இதே போல டியூப் வடிவில் மாத்திரை தயாரிப்பர்.

Must Read: 5 interesting facts – Series 1- பால் குடித்தா நெஞ்சுவலி வரும்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here