![pic](/wp-content/uploads/2021/06/pic-696x522.jpg)
தற்போது களமிறங்கிய நம்ம தமிழ்நாட்டு வீரர் நடராஜனின் திறமையை பார்த்து வியக்காத ஆளே இல்ல. வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்களும் புகழ்ந்து தள்ளுனாங்க. நம்ம கேப்டன் விராட் கோஹ்லில இருந்து ஜடேஜா, அஸ்வின் என்று பெரிய வீரர்களும் இவருடைய திறமையை பாராட்டினாங்க. இவரால் நம்ம தமிழ்நாட்டுக்கே பெருமை. ஆஸ்திரேலியாகூட நடந்த போட்டிகளில் எல்லாம் நடராஜன் விளையாண்ட திறமை மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றதோடு மட்டுமல்லாது அவருக்கென தனி ரசிகர் பட்டாளம் உருவாகியுள்ளது.
![T Natarajan Birthday: BCCI, Sunrisers Hyderabad Lead Wishes for the Pacer As He Turns 30 - Onhike - Latest News Bulletins](https://st1.latestly.com/wp-content/uploads/2021/03/T-Natarajan.jpg)
![T Natarajan Birthday: BCCI, Sunrisers Hyderabad Lead Wishes for the Pacer As He Turns 30 - Onhike - Latest News Bulletins](https://st1.latestly.com/wp-content/uploads/2021/03/T-Natarajan.jpg)
” யார்க்கர் கிங் ” நம்ம நட்டு :
இந்தியா கிரிக்கெட் டீம் சேர்ந்து தன்னுடைய யார்க்கர் திறமையால விக்கெட்டை அள்ளி எடுத்தாரு. இவர் போன சீரிஸ் எல்லாமே கப் நமக்குன்ற அளவுக்கு பேசப்பட்டது. நம்ம நட்டுக்கு அவரது ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் வச்ச செல்லப்பெயர் தான் ” யார்க்கர் கிங் ” என்கிற பெயர். உலகமுழுவதும் உள்ள ரசிகர்கள் இப்படித் தான் அழைப்பாங்க. Click Here Boss: 5 interesting facts around the world – Series 2 கோழியை அர்ரெஸ்ட் செய்த போலீஸ்!!
![Pavithra Natarajan - T Natarajan Wife, Age, Instagram - India Fantasy](https://bucketimg.datanethosting.us/wp-content/uploads/20210313124602/natarajan_jayaprakash_118594221_302906430808733_8621768793313724482_n.jpg)

மனைவி வைத்த செல்ல பெயர் :
இந்நிலையில நம்ம யார்கார் கிங்கிற்கு அவரது மனைவி புதுசா ஒரு பட்ட பெயர் வச்சிருக்காங்கப்பா!! . அந்த பெயர் வேற லெவெலா ட்ரெண்டிங் ஆகிடுவாருதமே. நம்ம நட்டு திறமையான பவுலர் மட்டும் அல்லாமல் அவர் ஒரு நல்ல கணவர் என்றும் நிரூபித்து காட்டி வராரு. தனது ஸ்கூல் தோழியான பவித்ரா என்கிற பெண்ணை தான் திருமணம் செய்து 3 வருடங்களே ஆகியுள்ள நிலையில் தங்களுடைய திருமண நாளை கொண்டாட நடராஜனின் மனைவி பவித்ரா தனது வலைதள பக்கத்தில் இன்ஸ்டாகிராம் பதிவு மூலம் சில விஷயங்களை ரசிகர்களுடன் பகிர பதிவிட்டுள்ளார்.
![Came with no expectations: T Natarajan on the 'extraordinary' opportunity to play in Australia](https://s01.sgp1.cdn.digitaloceanspaces.com/article/151759-gaymjxazao-1607492867.jpg)
![Came with no expectations: T Natarajan on the 'extraordinary' opportunity to play in Australia](https://s01.sgp1.cdn.digitaloceanspaces.com/article/151759-gaymjxazao-1607492867.jpg)
காதல் கலந்த மனைவியின் பதிவு :
“நம்முடைய வாழ்க்கைப்பயணத்தில் பல ஏற்ற இறக்கங்களை ஒன்றாகப் பகிர்ந்து வருகின்றோம். உங்களது சிரிப்பு இன்னும் என்னை மிகவும் உருக வைத்து வருகிறது. என்னுடைய வாழ்கை பயணத்தில் உள்ள காதலுக்குத் கல்யாண நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் ” என நடராஜனின் மனைவி தன்னுடைய பதிவில் வாழ்த்துக்களை கூறியதுடன் நடராஜன் ஒரு “புன்னகை மன்னன் ” எனவும் செல்லத்தோடு கூறியுள்ளார். இந்த பெயர் “யார்க்கர் கிங் என்ற ரசிகர்களின் செல்லப்பெயரை காட்டிலும் இந்த புன்னைகை மன்னன் செல்லத்துடன் மனதை தொடும் பெயராக உள்ளது என ரசிகர்களால் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
இது போன்ற செய்திகளுக்கு எங்களது இணையதளத்தை Follow செய்யுங்கள் – Times Tamil
[…] நம்ம நடராஜனுக்கு புதிய பட்டம் வழங்கி… […]