ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இரண்டு வருடத்திற்கு ஒரு முறை நடைபெறும். இந்த வருடம் இப்போட்டி இலங்கையில் வருகிற ஜூன் மாதத்தில் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் இப்போட்டி ரத்து செய்யப்படுவதாக இலங்கை கிரிக்கெட் வாரிய தலைமை நிர்வாகி ஆஷ்லே டி சில்வா கூறியிருக்கிறார்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி:
இந்தியா பாகிஸ்தான் இலங்கை மற்றும் வங்க தேசம் மோதும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இலங்கையில் நடப்பதாக இருந்தது. தற்போது இப்போட்டி ரத்து செய்யப்படுவதாக ஆஷ்லே டி சில்வா தெரிவித்தார். அவர் கூறுகையில்,” கொரோனா பரவல் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் இப்போட்டியை தற்பொழுது நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே ஆசிய கோப்பை போட்டியை ரத்து செய்வதை தவிர வேறு வழியில்லை. அதனால் ஒரு மனதாக இந்த முடிவினை எடுத்துள்ளோம்” என்று அவர் கூறினார்.
கடந்த வருடம் 2020 செப்டம்பர் மாதம் இப்போட்டி பாகிஸ்தானில் நடக்க இருந்தது. அந்நேரத்தில் கொரோனா அதிகமாக பரவி வந்ததாலும், இந்தியா பாகிஸ்தான் இடையே பிரச்னை இருப்பதால் பாகிஸ்தானில் போட்டியை நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. அதனால் ஆசியா கோப்பை போட்டி இந்த வருடம் ஜூன் மாதம் இறுதியில் இலங்கையில் நடந்தபடும் என்று முடிவு எடுக்கப்பட்டு இருந்தது.
ரசிகர்கள் எதிர்பார்ப்பு:
வெகுநாள் கழித்து இந்தியா பாகிஸ்தான் மோத போகிறது என்று ரசிகர்கள் இப்பொடியை ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டு இருந்தனர். கடைசியாக இந்திய அணி பாகிஸ்தானுடன் 2019 உலக கோப்பை போட்டியில் விளையாடியது. இந்நிலையில் இப்போட்டி ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து ரசிகர்கள் மிகவும் சோர்வு அடைந்தனர்.
2023க்கு பிறகே வாய்ப்பு:
இந்த முறை இந்தியா பாகிஸ்தான் இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் மலேசியா ஆகிய நாடுகள் பங்கு பெறுவதாக இருந்தது. சீரிஸ் ரத்து பண்ணதை தொடர்ந்து இந்த அணிகளுக்கு அடுத்த இரண்டு வருடங்கள் பல்வேறு போட்டிகளில் பங்கு பெற கால அட்டவணை உள்ளது. எனவே அடுத்த ஆசிய கோப்பை போட்டி 2023 உலக கோப்பை போட்டிகளுக்கு பின்பே வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. அதிகாரபூர்வ தகவல் இல்லை என்றாலும் அதுவரை போட்டிகளை நடத்த வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.
கடைசியாக இந்தியா வேற்றி :
கடைசியாக 2018ம் ஆண்டு ஆசிய கோப்பை போட்டி ஐக்கிய அமீரகத்தில் நடந்தது. இதில் பைனல் போட்டியில் இந்திய அணி வங்கதேச அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்று இருந்தது குறிப்பிடத்தக்கது.