![Icc](/wp-content/uploads/2021/06/Icc-scaled-1200x675-1-696x392.jpg)
ஆண்கள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் வருகிற 2024 முதல் 2031 வரையிலான நாட்களில் நடைபெறும் போட்டிகளை ICC அறிவித்துள்ளது. இதில் முக்கிய அறிவிப்பாக உலகக்கோப்பை தொடர் அதாவது 50 மற்றும் 20 ஓவர் உலகக்கோப்பை தொடரும் அடங்கும்.
2021 உலக்கோப்பை:
ஏற்கனவே இந்த ஆண்டு அக்டோபர் மாதம் இந்தியாவில் T20 உலகக்கோப்பை தொடர் நடக்க இருக்கிறது. கொரோனா தொற்று பரவலினால் ஏற்கனவே IPL போட்டிகள் பாதியிலே நிறுத்தப்பட்டது. இந்நிலையில் அக்டோபர் மாதம் நடைபெறும் உலகக்கோப்பை தொடரை இந்தியாவில் நடத்த முடியுமா என்ற கேள்வி எழும்பியுள்ளது. BCCI குழு இதற்கான ஆலோசனையில் உள்ளது. இறுதி முடிவை ICC ஜூலை மாதம் அறிவுக்கும். அப்படி தொடர் நடக்கும் போது புனே மற்றும் அஹமதாபாத் போன்ற மூன்று மைதானத்தில் மட்டுமே நடத்த முடியும் என்று BCCI தரப்பில் சொல்லப்பட்டுள்ளது.
50 ஓவர் உலகக்கோப்பை:
![சாம்பியன்ஸ்](https://cdn.insidesport.co/wp-content/uploads/2021/03/10082558/iccipl2021bccit20worldcup-1.jpg)
![சாம்பியன்ஸ்](https://cdn.insidesport.co/wp-content/uploads/2021/03/10082558/iccipl2021bccit20worldcup-1.jpg)
டாப் 8 அணிகள் மோதும் சாம்பியன்ஸ் ட்ரோபி மீண்டும் அறிமுகம் செய்யப்படுகிறது. மேலும் 2027 மற்றும் 2031-ல் நடைபெறும் உலகக்கோப்பை தொடரில் 14 அணிகளாக விரிவாக்கம் செய்ய இருக்கிறது. இரண்டு உலககோப்பை போட்டிகளிலும் 54 போட்டிகள் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்ள்ளது. இந்த தொடர் 2003ல் நடந்த தொடர் போல நடத்தப்படும். இந்த 14 அணிகளும் இரு குழுக்களாக பிரித்து லீக் போட்டிகள் நடத்தப்படும். லீக் போட்டிகள் முடிந்ததும் ஒவ்வொரு குழுவிலிருந்து டாப் 3 அணிகள் தேர்வு செய்யப்பட்டு சூப்பர் சிக்ஸ் போட்டிகள் நடத்தப்படும். அதன்பின் அரையிறுதி மற்றும் பைனல் போட்டிகள் நடக்கும். அதே போல உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் போட்டிகள் 2025, 2027, 2029, 2031 ஆண்டுகளில் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Must Read: தேர்வு இல்லாமல் அனைவரும் ஆல் பாஸ்: தமிழக அரசு அதிரடி உத்தரவு
T20 உலகக்கோப்பை:
![சாம்பியன்ஸ்](https://img.jagranjosh.com/imported/images/E/GK/icc-T-20-cricket-world-cup-winner-list.jpg)
![சாம்பியன்ஸ்](https://img.jagranjosh.com/imported/images/E/GK/icc-T-20-cricket-world-cup-winner-list.jpg)
T20 உலகக்கோப்பை தொடரும் விரிவாக்கம் செய்யப்படுகிறது. அது 20 டீம் கொண்ட தொடராக இருக்கும். இந்த அணிகளை 4 குழுக்களாக பிரித்து லீக் போட்டிகள் நடந்தபடும். இதிலிருந்து ஒவ்வொரு குழுவுக்கும் 2 அணிகள் வீதம் 8 அணிகள் தேர்வு செய்யப்பட்டு குரூப் 8 போட்டிகள் நடத்தப்படும். அதன் பின் அரையிறுதி மற்றும் பைனல் போட்டிகள் நடத்தப்படும்.
நான்கு T20 உலகக்கோப்பை தொடரை 2024, 2026, 2028, 2030 ஆண்டுகளில் நடத்த ICC திட்டமிட்டுள்ளது. மேலும் சாம்பியன்ஸ் ட்ரோபி மீண்டும் 2025ல் நடத்தப்படுகிறது. இது 2017ல் நடந்த தொடருக்கு பின் 8 வருடங்கள் கழித்து நடத்தப்படுகிறது. இது வழக்கம் போல டாப் 8 அணிகள் இந்த தொடரில் மோதும். இந்த அட்டவணையை ICC வெளியிட்டுள்ளது. கிரிக்கெட் ரசிகர்களுக்கு இது உற்சாகத்தை தந்துள்ளது.
இது போன்ற செய்திகளுக்கு எங்களது இணையதளத்தை Follow செய்யுங்கள் – times tamil