வாக்காளர் அடையாள அட்டையை ஆன்லைனில் எப்படி விண்ணப்பிப்பது?

How to apply voter id card online in tamil

0
40
Facebook
Twitter
WhatsApp
Telegram

இன்று நிறைய பேருக்கு வீட்டிலிருந்தே ஆன்லைனில் வாக்காளர் அடையாள அட்டைக்கு எப்படி விண்ணப்பித்தது என்று தெரியாது. இந்த பதிவில் எப்படி ஈஸியா விண்ணப்பிப்பது என்று பார்ப்போம்.

How to apply voter Id in online:

  1. முதலாவது https://www.nvsp.in/ இந்த இணையத்தளத்திற்குள் நுழைய வேண்டும்.
  2. அதன்பின் இடது பக்கம் கீழ் பகுதியில் “Login/Register” என்று இருக்கும். அதை கிளிக் செய்யுங்கள்.
  3. ஏற்கனவே இந்த இணையத்தளத்தில் பதிவு செய்திருந்தால் உங்களுடைய User Name, Password மற்றும் captcha என்டர் செய்து உள் நுழையுங்கள்.
  4. இதுதான் முதல் முறை என்றால் “Register as a New User” என்பதை கிளிக் செய்யுங்கள்.
  5. பின்னர் ஒரு பக்கம் ஓபன் ஆகும். அதில் உங்கள் மொபைல் எண் மற்றும் captcha வை பதிவு செய்து Send OTP என்பதை கிளிக் செய்யுங்கள்.
  6. OTP வந்ததும் அதை என்டர் செய்து Verify என்பதை கிளிக் செய்யுங்கள்.
  7. அதன்பின் கீழே ஒரு பக்கம் இருக்கும். அதில் “I dont have EPIC number” என்பதை கிளிக் செய்யுங்கள்.
  8. அதில் உங்களுடைய முதல் பெயர், கடைசி பெயர், மெயில் id, கடவு சொல் இவற்றை பதிவு செய்யுங்கள். அதன்பின் Register என்பதை கிளிக் செய்யுங்கள்.
  9. அதன்பின் லாகின் பக்கம் ஓபன் ஆகும். அதில் உங்கள் மொபைல் நம்பர் அல்லது மெயில், கடவுச்சொல் மற்றும் கேப்சா கொடுத்து லாகின் என்பதை கிளிக் செய்யுங்கள்.
  10. தற்போது ஒரு பக்கம் ஓபன் ஆகும். அதில் “Fresh inclusion/ Enrollment” என்பதை கிளிக் செய்யுங்கள்.
  11. அடுத்த பக்கத்தில் “I reside in India” என்பதை செலக்ட் செய்து உங்கள் மாநிலத்தை செலக்ட் செய்யுங்கள்.
  12. புதிதாக ஓப்பனாகும் பக்கத்தில் நீங்கள் எந்த அசம்பிளியை சார்ந்தவர் என்பதை செலக்ட் செய்யுங்கள்.
  13. அதன்பின் கீழே உள்ள உங்கள் மாநிலம், மாவட்டம், முகவரி இவை எல்லாவற்றையும் பதிவு செய்து(ஆங்கிலம் மற்றும் தமிழில் பதிய வேண்டும். ஆங்கிலத்தில் பதியும் போது அதுவே தமிழில் வரும். அதில் எதும் பிழை இருந்தால் பக்கத்தில் உள்ள தமிழ் கீபோர்டில் சரி செய்து கொள்ளலாம்) Date என்ற இடத்தில் நீங்கள் எந்த நாளில் பதிவு செய்கிறீர்களோ அந்த நாளை செலக்ட் செய்யுங்கள்.
  14. அதன் கீழ் உள்ள Upload document-ல் நீங்கள் எந்த ஆதாரத்தை தருகிறீர்கள் என்பதை செலக்ட் செய்து அதே ஆதாரத்தை ஸ்கேன் செய்து Upload செய்யுங்கள். அதன் அளவு 2 MBக்கு குறைவாக இருக்க வேண்டும். பின்னர் NEXT என்பதை கிளிக் செய்யுங்கள்.
  15. அடுத்த ஒரு பக்கம் ஓபன் ஆகும். அதில் உங்கள் பிறந்த தேதி, இடம், மாநிலம் மற்றும் மாவட்டம் இவற்றை பதிவு செய்யுங்கள். பின்னர் உங்கள் வயதுக்கான ஆதாரமாக பான் கார்டு, பிறந்த சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், பாஸ்போர்ட் அல்லது ஆதார் இவற்றில் ஒன்றை அப்லோட் செய்யுங்கள்.
  16. அதில் Age Declaration பார்ம் இருக்கும் அதை பதிவிறக்கம் செய்து அதை பூர்த்தி செய்து பின் அவற்றை ஸ்கேன் செய்து அப்லோட் செய்யுங்கள்.
  17. அடுத்த பக்கத்தில் உங்களுடைய முழு விவரம் அதாவது உங்கள் பெயர், தகப்பன் பெயரை ஆங்கிலம் மற்றும் தமிழில் பதிவு செய்யுங்கள்.
  18. பின்னர் உங்கள் புகைப்படத்தை இணையுங்கள். அதன் அளவு 2 MB க்கு அதிகமாக இருக்க கூடாது.
  19. அடுத்த பக்கத்தில் நீங்கள் மாற்றுத்திறனாளியாய் இருந்தால் அதை செலக்ட் செய்யவும். இல்லை என்றால் உங்கள் மொபைல் எண்ணை மட்டும் என்டர் செய்து Next என்பதை கிளிக் செய்யவும்.
  20. அடுத்த பக்கத்தில் நீங்கள் எந்த ஊர் என்பதை பதிவு செய்து Next என்பதை கிளிக் செய்யுங்கள்.
  21. அடுத்த பக்கத்தில் நீங்கள் கொடுத்த அனைத்து விவரங்களும் வரும். அதை ஒருமுறை சரிபார்த்து “SUBMIT” என்பதை கிளிக் செய்யுங்கள்.
  22. உங்கள் அப்ளிகேஷன் ஏற்றுக்கொள்ளப்பட்டது என்றும் ஒரு ரெபெரென்ஸ் நம்பரும் உங்கள் மொபைல் மற்றும் மெயிலுக்கு வரும். அதை பத்திரமாக வைத்திருங்கள்.
  23. இவை எல்லாவற்றையும் சரிபார்த்து, உங்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை உங்கள் வீட்டுக்கே வந்து விடும். ஒருவேளை வரவில்லை என்றால் பக்கத்திலுள்ள தாலுகா அலுவலத்தில் பெற்று கொள்ளலாம்.

பதிவு செய்வதற்கு முன் கவனிக்க வேண்டியவை:

  1. உங்களிடம் தேவையான எல்லா சான்றிதழும் இருக்கிறதா என்று செக் செய்து கொள்ளுங்கள்.
  2. எல்லா சான்றிதழையும் ஸ்கேன் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.
  3. சரியான அளவோடு இருக்கிறதா என்பதை உறுதிசெய்து கொள்ளுங்கள்.
  4. விண்ணப்பிக்கும் போது எல்லா தகவல்களையும் சரியாக அப்டேட் செய்யுங்கள்.

இந்த வழிமுறைகளை முழுவதும் படித்து பார்த்து வீட்டிலிருந்தே உங்கள் வாக்காளர் அட்டையை எளிதாக பெற்று கொள்ளுங்கள்.

இது போன்ற செய்திகளுக்கு எங்களது இணையதளத்தை Follow செய்யுங்கள் – Times Tamil

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here