![smart-ration-card-online](/wp-content/uploads/2021/06/smart-ration-card-online.jpg)
தமிழ்நாட்டில் புதிய ரேஷன் கார்டு அதாவது ஸ்மார்ட் கார்டு பெற பலமுறை அரசாங்க அலுவகத்திற்கு சென்று அலைந்திருப்போம். ஆனால் ரேஷன் அட்டை மட்டும் கிடைத்து இருக்காது. இந்த பதிவில் எப்படி ஈஸியா ஆன்லைன்லயே விண்ணப்பித்து பெறுவது என்று பார்ப்போம்.
செய்தி சுருக்கம்:
1.இணையத்தளத்தில் உள் நுழைய வேண்டும்.
2.தேவையான தகவல்களை பதிய வேண்டும்.
3.முகவரி சான்றிதழை இணைக்க வேண்டும்
![](/wp-content/uploads/2021/06/ration-card-2-1024x433.jpg)
எப்படி விண்ணப்பிப்பது: 1. முதலாவது https://www.tnpds.gov.in/ க்குள் நுழைய வேண்டும். வலது ஓரத்தில் மொழி(தமிழ், ஆங்கிலம்) இருக்கும். அதில் உங்களுக்கு படிக்கச் ஈஸியான மொழியை தேர்ந்தெடுத்து கொள்ளுங்கள். 2. அந்த பக்கத்தில் மின்னனு அட்டை விண்ணப்பிக்க என்ற இடத்தில் கிளிக் செய்யவும். புதிய பக்கம் ஒன்று வரும். அதில் புதிய மின்னனு அட்டைக்கான விண்ணப்பம் என்பதை செலக்ட் செய்யவும். 3. கீழே குடும்ப தலைவர் பெயர், தந்தை அல்லது கணவர் பெயர் மற்றும் உங்கள் முகவரியை பூர்த்தி செய்ய வேண்டும். தமிழ் மற்றும் ஆங்கிலம் இரண்டு மொழியிலும் பூர்த்தி செய்ய வேண்டும். 4. அதன் பின் உங்களுடைய மாவட்டம், வட்டம், கிராமம், பின்கோடு மற்றும் மொபைல் எண் இவற்றை பதிவு செய்ய வேண்டும். 5. அதன் கீழே உறுப்பினர் விவரம் சேர்க்க என்பதை கிளிக் செய்ய வேண்டும். இதில் முதலாவது குடும்ப தலைவர் அல்லது தலைவியின் விவரங்களை பதிவு செய்ய வேண்டும். பெயர், பிறந்த தேதி, பாலினம், தொழில், வருமானம் மற்றும் ஆதார் எண்ணை(5 வயதுக்கு மேல் கண்டிப்பாக) சேர்க்க வேண்டும். பின் அவருடைய ஆதார் அட்டையை ஸ்கேன் செய்து இணைக்க வேண்டும். பின்னர் பதிவேற்று என்றதை கிளிக் செய்ய வேண்டும். 6. மேலே செய்தது போல் உறுப்பினர் விவரம் செமி என்பதை கிளிக் செய்து வீட்டிலுள்ள நபர்கள் எல்லாரையும் சேர்க்க வேண்டும். 7. பின்னர் குடும்ப தலைவர் அல்லது குடும்ப தலைவியின் புகைப்படத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும். அவை 5 MB க்கு மிகாமல் இருக்க வேண்டும். 8. அதன் பின் எந்த அட்டை என்பதை செலக்ட் செய்ய வேண்டும். பண்டகமில்லா அட்டை, அரிசி அட்டை, சக்கரை அட்டை என்பதில் ஒன்றை செலக்ட் செய்ய வேண்டும். 9. அதன் பின் இருப்பிட முகவரி சான்றுக்காக நீங்கள் எந்த சான்றிதழை தருகிறீர்களோ அதை செலக்ட் செய்து அதனுடைய ஸ்கேன் காபியை இணைக்க வேண்டும். 10. பின்னர் எரிவாயு இணைப்பு உள்ளதா என்பதை செலக்ட் செய்ய வேண்டும். 11. பின்னர் உறுதிப்படுத்துதல் என்பதை கிளிக் செய்து கடைசியாக பதிவு செய் என்பதை கிளிக் செய்து சப்மிட் கொடுக்க வேண்டும். 12. இவை எல்லாவற்றையும் சரியாக கொடுக்கும் பொழுது ஒரு ரெபெரென்ஸ் நம்பர் உங்களுக்கு கொடுக்கப்படும். அவற்றை வைத்து நீங்கள் இதே இணையதளத்தில் ஸ்டேட்டஸ் தெரிந்து கொள்ளலாம்.
இது போன்ற செய்திகளுக்கு எங்களது இணையதளத்தை Follow செய்யுங்கள் – Times Tamil