2018ம் ஆண்டு தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் மரணமடைந்த 13 பேரின் குடும்பம் மற்றும் படுகாயம் அடைந்த 3 குடும்பங்கள் உட்பட 16 பேருக்கு அரசு பணி நியமன ஆணை வழங்கினார் முதல்வர் மு க ஸ்டாலின்.
கொரோனா பரவலின் நடவடிக்கையை பார்வையிடுவதற்காக மதுரை வந்த முதல்வர் இன்று தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் இறந்த குடும்பகளுக்கு அரசு பணி நியமன ஆணை வழங்கினார். இந்த கூட்டத்தில் கனிமொழி, தூத்துக்குடி ஆட்சியர், பி டி பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
2018ம் ஆண்டு ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து போராட்டக்காரர்கள் 100 நாட்கள் போராடிய நிலையில், 100 வைத்து நாள் போராடகர்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் உருவானது அதில் 13 பேர் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களுக்கு ஏற்கனவே அரசு பணி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த போராட்டம் நடந்து இந்த வருத்தத்தோடு 3 வருடங்கள் முடிந்த நிலையில் தூத்துக்குடி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான அரசு வேலையை இன்று முதல்வர் மு க ஸ்டாலின் வழங்கி இருப்பது வரவேற்கத்தக்கது.