Bharti Airtel நிறுவனம் தன் வாடிக்கையாளர்களுக்கு 49 ரூபாய்க்கான பேக்கை இலவசமாக வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளது. அதிகரித்து வரும் கொரோனா தொற்றின் காரணமாக மக்கள் பல இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். Airtel நிறுவனம் மக்களுக்கு இந்த உதவியை செய்ய முன் வந்துள்ளது. ஏற்கனவே ஜியோ நிறுவனம் இலவச அழைப்புகளை தன் வாடிக்கையாளர்களுக்கு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Airtel நிறுவனம் அந்த அறிவிப்பில் நாட்டிலுள்ள 5.5 கோடி குறைந்த வருமானம் உள்ள வாடிக்கையாளர்களுக்கு 49 ரூபாய் பேக் இலவசமாக வழங்கப்படும் என்றும், இந்த பேக்கின் மூலம் 38 ரூபாய் டாக்டைமும், 100 MB இன்டர்நெட் வழங்கப்படும் என்று இதன் வேலிடிட்டி 28 நாட்கள் என அறிவித்துள்ளது. இது குறிப்பாக கிராமப்புற வாடிக்கையாளர்களுக்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும்.
கொரோனா தொற்றின் இக்கட்டான நாட்களில் இவை கிராமப்புற மக்களுக்கு இவை பிரயோஜனமாக இருக்கும் என்றும் Airtel நிறுவனம் அறிவித்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் வரைக்கும் 34 கோடி வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது.
இதோடு கூட இரண்டு சப்ஸகிரிபிஷனை வழங்குகிறது. Covid SOS மற்றும் Cowin. Covid Sos வெரிபை செய்யப்பட்ட சப்ளை காண்டாக்ட் லிஸ்டை வழங்குகிறது. உதாரணமாக மருந்து, ஆக்ஸிஜன், பிளாஸ்மா டோனோர் இன்னும் பல தகவல்களை வழங்குகிறது. Cowin தடுப்பூசி சென்டர் எங்கு உள்ளது என்பதையும் அதற்கு பதிவு செய்யும் வசதியை வழங்குகிறது.