இப்பொழுது உள்ள காலகட்டத்தில் உடல் உழைப்பு என்பது அறவே இல்லாத நிலைமைதான். வாழ்க்கைக்கு உடல் நலமாக இருந்தாலே கோடி செல்வத்திற்கு சமம். எனவே உடல்நலனில் அக்கறை கட்ட வேண்டும்.நாங்க சொல்லப்போற இந்த உடற்பயிற்சிக்கு ஒரு 10 – 20 நிமிஷம் ஒதுக்கினாலே போதும், வீட்டிலே செய்யலாம்.
அதற்கு ஸ்கிப்பிங் 10 நிமிடமும், புஷ் அப் (10 தடவையும் ),
கிரஞ்சஸ் (25 தடவையும்) மற்றும் குந்துகைகள் (15 தடவையும்) இதை உங்கள் உடல் வலுவிற்கு ஏற்றார் போல முடிந்தவர்கள் 2 – 3 முறை செய்ய வேண்டும்.
அதே போல் நடைப்பயிற்சியை 10 – 20 நிமிடங்களுக்கு மேற்கொள்ளவேண்டும் . இதனால் 106 கலோரிகள் எரிக்கப்படும் என American College Of sports medicine னால் அறிவிக்கப்பட்டது. மியூசிக் அண்ட் டான்ஸ ஆடுவது மூலம் (ஜும்பா) 1 மணி நேரத்தில் 400 முதல் 600 கலோரிகள் குறைக்கப்படும். எனவே இதை தினசரி மேற்கொண்டால் உடல் கட்டுக்கோப்பாகவே இருக்கும்.
அதுமட்டுமில்லாமல் வீட்டை சுத்தம் செய்வதன் மூலம் உடல் பிட்டாகவும் இருப்பதோடு மட்டுமில்லாமல் மன அழுத்தம் குறையும் என கூறப்படுகிறது. வீட்டை சுத்தம் செய்வது 20 நிமிட நடைப்பயிற்சிக்கு சமமாம். இதனால் மட்டும் 200 கலோரிகள் குறைகிறதாம்.
எனவே இந்த ஊரடங்கு சமயத்தில் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க மேல குறிப்பிட்டுள்ள உடற்பயிற்சியை தினசரி மேற்கொண்டாலே போதும் . உடல் எடை கணிசமாக குறையும் உடலும் முழு கட்டுக்கோப்பாக மாறும் . நண்பர்களே இன்னைல இருந்து ட்ரை பண்ணுங்க !!