• Thu. May 20th, 2021
செய்திகள்

சமந்தா நடித்த ஓடிடி தொடருக்கு எதிர்ப்பு !! என்ன பிரச்சனை!!

ByADMIN

May 19, 2021

The Family Man Season 2: Samantha Akkineni to make her web debut with Manoj Bajpayee show

இப்பொழுதெல்லாம் கேபிள் டிவி தொடருக்கு பதிலாக இணைய தொடருக்கு மாறிவரும் ரசிகர்கள் அணைத்து மொழியில் வரும் தொடரையும் கண்டு கழிக்க ஆரம்பித்துவிட்டனர். இதில் தமிழ் தொடரும் அடங்கும். அந்த மாதிரி “தி பேமிலி மேன் ” என்ற தொடர் வெளியாகி பட்டையை கிளப்பியது.

Watch The Family Man Season 1 On Amazon Prime Video For Free

அந்த தொடர் 2019 செப்டம்பர் மாதத்தில் அமேசான் பிரைமில் வெளியாகியது. அதில் மனோஜ் பாஜிபாய், ப்ரியாமணி நடிக்க ராஜ் மற்றும் டி.கே இயக்கி வெளிவந்து நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், “தி பேமிலி மேன் ” பாகம் 2 வெளியாக உள்ளது. இதில் திரைப்பட நாயகி சமந்தா நடித்துள்ளார்.

The Family Man' Season 2 Release Date, Renewal News, Plot: Samantha Akkineni will be seen as new cast member

அந்த தொடரில் சமந்தா இலங்கை தமிழராக நடித்துள்ளார். அதன் ட்ரைலர் ஜுன் 4 லில் வெளியாக உள்ளது. ஹிந்தி, தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. அதன் ட்ரைலர் வெளியாகியுள்ள நிலையில் அதில் பேசிய வந்த வசனத்தில் ” ஐ.எஸ்.ஐ க்கும் போராளிக்கும் எதிர்பாராத வகையில் கூட்டணி அமைந்தது ” என்ற வார்த்தையால் பெரிய எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

நிகரன்'s tweet -

அந்த வசனத்தில் இலங்கை போரை தவறாக சித்தரித்து உள்ளனர் என பெரும் எதிர்ப்பை சமூகவலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர். அது மட்டுமில்லாமல் #familyman2_against_tamils என்கிற ஹாஷ்டாக் பெரிய அளவில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். எனவே அந்த தொடர் வெளியாகுமா என பொறுத்துதான் பார்க்க வேண்டும்.


ADMIN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *