நியூஸிலாந்து மற்றும் இங்கிலாந்து இடையே இரண்டு போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் ஜூன் 2 தேதி லண்டனில் ஆரம்பிக்கிறது. இந்த தொடருக்கு இங்கிலாந்து அணி வீரர்களை தேர்வு செய்துள்ளது.
ஸ்டோக்ஸ் மற்றும் ஆர்ச்சர் இல்லை:
காயம் காரணமாக ஸ்டோக்ஸ் மற்றும் ஆர்ச்சர் அணியில் எடுக்கப்படவில்லை. பென் ஸ்டோக்ஸ் சமீபத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் காயம் அடைந்தார். காயம் இன்னும் குணமாகாததால் அவர் அணியில் எடுக்கப்படவில்லை. ஆர்ச்சர் சமீபத்தில் ஆபரேஷன் செய்து கொண்டு உள் தர போட்டிகளில் பங்கு கொண்டார். அந்த போட்டியில் அவருக்கு காயம் ஏற்பட்டதால் அவரும் அணியில் எடுக்கப்படவில்லை.
பட்லர், மெயின் அலி, சாம் கரண்:
தற்போது தான் ஐபிஎல் லிருந்து நாடு திரும்பிய பட்லர், மெயின் அலி, சாம் கரண் குவாரன்டின் காரணமாக அவர்களும் அணியில் எடுக்க படவில்லை அவர்களுக்கு ரெஸ்ட் வழங்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு பதில் இரண்டு புது முகங்கள் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
புதுமுக வீரர்கள்:
ஜேம்ஸ் பிரசி மற்றும் ராபின்சன் இரண்டு பெரும் புதிதாக அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஜேம்ஸ் பிரசி பேட்ஸ்மேன் ஆவார் . ராபின்சன் பந்து வீச்சாளர் ஆவார். இவர்கள் இருவரும் உள்ளூர் போட்டிகளில் சிறந்து விளங்கியதால் அணியில் எடுக்கப்பட்டுள்ளனர். ஜேம்ஸ் பிரசி 478 ரன்களும் ராபின்சன் 29 விக்கெட்டும் வீழ்த்தியுள்ளனர்.
அசுர பலம்:
இங்கிலாந்திற்கு எப்போதுமே அந்த அணியின் வேக பந்துவீச்சுதான் பலம். ஆண்டர்சன், ப்ரோடு, மார்க் வுட், ஸ்டோன் என்று எதிர் அணியின் பேட்ஸ்மேன்யை மிரட்டும் பந்து வீச்சாளர்கள் உள்ளனர். 40 வயதை நெருங்கியபின்னும் ஸ்விங் பௌலிங்கில் கலக்கி வரும் ஆண்டர்சன் இருப்பது கூடுதல் பலம்.
நியூஸிலாந்து:
இந்தியாவுடன் WTC பைனலில் மோதுவதற்கு முன்பாக நியூஸிலாந்து அணி இங்கிலாந்திடம் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது.
அணியின் விவரம்:
Joe Root (c), James Anderson, James Bracey, Stuart Broad, Rory Burns, Zak Crawley, Ben Foakes, Dan Lawrence, Jack Leach, Craig Overton, Ollie Pope, Ollie Robinson, Dom Sibley, Olly Stone, Mark Wood