தமிழ்நாட்டில் இன்று முதல் மாவட்டக்களுக்கிடையே பயணம் செய்ய இ பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் நாளுக்குநாள் பெருகி வரும் கொரோனா தொற்றின் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நாளொன்றுக்கு 30000 க்கும் அதிகமான பேர் தொற்றினால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
அத்தியாவச தேவைகளுக்கு அதாவது திருமணம், இறப்பு, நேர்காணல் மற்றும் வேலைவாய்ப்பு போன்ற காரியங்களுக்கு இ பதிவு செய்து தகுந்த ஆவணங்களுடன் பயணம் மேற்கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எங்கு பதிய வேண்டும்:
இந்த லிங்கை https://eregister.tnega.org/#/user/pass கிளிக் செய்ததும், நீங்கள் வெளிநாட்டிலிருந்து தமிழ்நாடு வருகிறவர்கள் மற்றும் மற்றவர்கள் என்ற இரண்டு காலம் காட்டும். இதில் மற்றவர்கள் என்ற பாக்ஸில் கிளிக் செய்ய வேண்டும். பின்னர் கீழே உள்ள திரை தோன்றும்.
இதில் உங்கள் மொபைல் நம்பரையும் வெரிஃபிகேஷன் நம்பரையும் பதிவு செய்து சென்ட் OTP கிளிக் செய்ய வேண்டும். அப்பொழுது உங்கள் நம்பருக்கு ஒரு OTP வரும். OTP என்டர் செய்து லாகின் செய்ய வேண்டும். அதில் தனி நபர் அல்லது குழு சாலை வழி பயணம் என்று ஒரு பாக்ஸ் இருக்கும். அதை கிளிக் செய்ய வேண்டும்.
STEP 1:
முதல் ஸ்டெப்பில் காரணம், மற்றும் எந்த மாவட்டத்திற்கு செல்ல வேண்டும், மற்றும் ID proof இன்னும் சில ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்
STEP 2:
இரண்டாவது ஸ்டெப்பில் உங்களுடைய முகவரி மற்றும் மற்றும் நீங்கள் செல்லும் மாவட்டத்தின் முகவரியை பத்தி செய்ய வேண்டும்.
STEP 3:
மூன்றாவது ஸ்டெப்பில் இவை எல்லாவற்றியும் பதிவிட்டு submit என்ற பொத்தானை அழுத்த வேண்டும். ஆவணங்கள் எல்லாம் சரியாக இருக்கும் பட்சத்தில் இ பதிவு கொடுக்கப்படும்.