![MV5BNWEzZDMwOWMtNjViYi00MWNiLThlMjYtNzBlYTZmNTJjOTI5XkEyXkFqcGdeQXVyODMyODMxNDY@._V1_](/wp-content/uploads/2021/06/MV5BNWEzZDMwOWMtNjViYi00MWNiLThlMjYtNzBlYTZmNTJjOTI5XkEyXkFqcGdeQXVyODMyODMxNDY@._V1_-696x392.jpg)
மலையாள படமான த்ரிஷ்யம் முதல் பாகத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து த்ரிஷ்யம் 2 அமேசான் பிரைமில் பிப்ரவரி 18 ஆம் தேதி வெளியாகி அதுவும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. த்ரிஷ்யம் 2: தி ரெஸ்யூஷன் (த்ரிஷ்யம் 2) படத்தை ஜீது ஜோசப் அவர்களால் எழுதி இயக்கப்பட்ட படமாகும். ஆண்டனி பெரும்பவூரின் ஆஷிர்வாட் சினிமாஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. 2013 இல் வெளிவந்த த்ரிஷ்யம் திரைப்படத்தின் தொடர்ச்சியாக வந்துள்ளது. இப்படத்தில் மோகன்லால், மீனா, எஸ்தர் மற்றும் அன்சிபா ஹாசன் நடித்துள்ளனர். இக்கதையின் தொடர்ச்சி ஆறு வருடங்களுக்கு பிறகு நடைபெற்ற ஒரு தொடர்ச்சிக்கதையாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
![South Indian Superstar Mohanlal On Amazon Film 'Drishyam 2 - Variety](https://variety.com/wp-content/uploads/2021/02/Mohanlal-Drishyam.jpg?w=681&h=383&crop=1)
![South Indian Superstar Mohanlal On Amazon Film 'Drishyam 2 - Variety](https://variety.com/wp-content/uploads/2021/02/Mohanlal-Drishyam.jpg?w=681&h=383&crop=1)
கதையின் சுருக்கம் தெரிந்துகொள்ள :
ஜோஸ் என்ற குற்றவாளி போலீசாரால் தேடப்படுவது படம் தொடங்குகிறது. ஜோஸ் தப்பித்து வரும்பொழுது புதிய காவல் நிலையம் கட்டபட்டகொண்டிருக்கும் இடத்தில ஜார்ஜ்குட்டி (மோகன்லால் ) வெளிவருவதை பார்க்கிறார். பின்னர் காவலர்கள் ஜோஸை பிடித்து விடுகிறார்கள்.
6 வருடங்களுக்கு பிறகு, 2019 ஆண்டில், ஜார்ஜ்குட்டி, ராணி, அஞ்சு மற்றும் அனு ஆகியோர் ஒரு நல்ல அமைதியான வாழ்க்கையை நடத்துகிறார்கள். இப்போது ஒருதியேட்டர் ஓனரான ஜார்ஜ்குட்டி, சொந்தமாக ஒருபடத்தை தயாரிக்க விரும்புகிறார், அதை அவரது குடும்பம் எதிர்க்கிறது. தனது விருப்பத்திற்கு உதவியாக சொல்ல புகழ்பெற்ற திரைப்பட திரைக்கதை எழுத்தாளர் விநாயச்சந்திரத்துடன் அவர் தொடர்ந்து தொடர்பு கொண்டுள்ளார். மீண்டும் மீண்டும் அஞ்சு வலிப்பு நோயால் அவதிப்படுகிறார். அவர் பி.டி.எஸ்.டி நோயால் பாதிக்கப்பட்டிருந்தர். ஜார்ஜ் குட்டியின் பொருளாதார உயர்வு குறித்து பொறாமை கொண்ட ஜார்ஜ்குட்டியின் பக்கத்தில் வசிப்பவர்கள் வருண் அஞ்சு இடையே பழக்கத்தை பற்றி புரளியை பரப்புகின்றனர்.
தண்டனைபெற்று திரும்பும் ஜோஸ் மூலம் போலீஸ் வருணின் பிணம் புதைக்கப்பட்டதை கண்டுபிடிக்கின்றனர். அதிலும் காவல் நிலயத்திலே புதைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைகின்றனர். வருணின் உடல் கண்டுபிடிக்கப்பட்டு வருணின் கொலை வழக்கு மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
![Drishyam 2' review: Jeethu-Mohanlal thriller is a superb sequel | The News Minute](https://www.thenewsminute.com/sites/default/files/styles/news_detail/public/Drishyam2_Screengrab_19022021_1200.jpg?itok=fprC_y1l)
![Drishyam 2' review: Jeethu-Mohanlal thriller is a superb sequel | The News Minute](https://www.thenewsminute.com/sites/default/files/styles/news_detail/public/Drishyam2_Screengrab_19022021_1200.jpg?itok=fprC_y1l)
கலக்கிய கிளைமாக்ஸ்:
வினயச்சந்திரனின் ஐடியா படி ஜார்ஜ்குட்டிக்கு எதிரான ஆதாரம் எதுவுமே கிடைக்காததால் ஜார்ஜ்ககுட்டி விடுவிக்கப்படுகிறார். அந்த வருணின் உடலை எரித்த சாம்பல் அவனது பெற்றோரிடம் கிடைக்க வழிசெய்து விட்டு வருகிறார் ஜார்ஜ் குட்டி. இந்த கதையை திரில்லர் பாணியில் மக்களுக்கு கொடுத்திருப்பார்.
தரவரிசையில் நம்பர் ஓன் இடம்:
இந்நிலையில் இந்த படத்திற்கு மிக பிரபலமான IMDBயில் இந்த வருடம் வெளியான படங்களையெல்லாம் விட்டு முன்னேறி 8.8 புள்ளிகளுடன் முதல் இடத்தை பிடித்துள்ளது. இதை மோகன்லால் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். த்ரிஷியம் முதல் பாகமும் IMDBயில் அதிக புள்ளிகளை பெற்றது குறிப்பிடத்தக்கது.
படிக்க கிளிக் செய்ங்க: 96 படத்தில் நீங்கள் தானே விஜய்சேதுபதியை திருமணம் செய்திருக்க வேண்டும்? ரசிகரின் கேள்விக்கு நடிகை பதில்
இது போன்ற செய்திகளுக்கு எங்களது இணையதளத்தை Follow செய்யுங்கள் – Times Tamil