இந்தியாவில் கொரோனா தொற்று ருத்ரதாண்டவம் ஆடிவரும் நிலையில் எல்லா மாநிலங்களும் அவற்றை சமாளிக்க அநேக நடைமுறைகளை பின்பற்றி வருகின்றனர். முழு ஊரடங்கு அமல்படுவதன் மூலம் கொரோனாவை சற்று குறைத்து இருக்கின்றனர். முதல் அலை முடிந்து இரண்டாவது அலையில் நாடு முழுவதும் பாதிப்ப்பு அதிகம் காணப்படுகிறது.
கருப்பு பூஞ்சை நோய்:
கொரோனாவோடு சேர்த்து அதன் பக்கவிளைவாக கருப்பு பூஞ்சை எனும் நோயும் பரவி வருவதால் நாட்டு மக்களை காப்பாற்ற வேண்டிய சூழ்நிலை அணைத்து மாநிலங்களுக்கும் உண்டு. அதன் அடிப்படையில் அனைத்து மாநிலங்களும் அவற்றை கட்டுப்படுத்துவதற்கு தடுப்பூசி, ஆக்ஸிஜன் மற்றும் மாத்திரைகள் அனைத்தும் பாதிக்கப்பட்டவர்களுக்கு கிடைக்க ஏற்பாடு செய்கிறது.
பெற்றோரை இழந்த குழந்தைகள்:
இந்த கொரோனா தொற்றுக்கு பல குழந்தைகள் அனாதையாகியுள்ளனர். ஒரே வீட்டில் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் தொற்று ஏற்பட்டு அவர்கள் மரணம் அடையும் போது அந்த பிள்ளைகள் பெற்றோரை இழந்து அனாதையாகின்றனர். இந்த சூழ்நிலையில் அவர்களை இனிமேல் கவனித்து கொள்வதற்கு யாரும் இல்லை மற்றும் அதற்கு பணமும் தேவைப்படும்.
ஆந்திர அரசு அதிரடி:
இந்நிலையில் ஆந்திர மாநிலத்தின் முதல்வர் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். கொரோனா நோயினால் பெற்றோரை இழந்த குழந்தையின் வங்கி கணக்குகளில் 10 லட்சம் செலுத்தப்படும் என்றும் அந்த பிள்ளைகளை கண்காணிப்பவர்கள் அதில் இருந்து வரும் வட்டியை வைத்து குழந்தைகளை பார்த்து கொள்ள வேண்டும் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது பெற்றோரை இழந்து வாடும் குழந்தைகளுக்கு மிகவும் உதவியாக இருக்கும். இதற்காக சட்டம் ஒன்று இயற்றி அதை விரைந்து செயல்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.