கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுக்கொள்ள ஆன்லைனில் பதிவு செய்தவர்கள் போட்டு கொள்ளும் தேதியை மாறிக்கொள்ளுங்கள் என்றும், ஆன்லைனில் பதிவுசெய்த 84 நாட்களுக்கு பிறகே தேதி ஒதுக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. கோவிஷீல்டு தடுப்பூசிக்கான இடைவெளி காலம் 90 நாட்கள் என அதிகரிக்கப்பட்ட நிலையில் மத்திய சுகாதாரத்துறை இந்த அறிவிப்பை தெரிவித்துள்ளது.
நேஷனல் ஹெல்த் மிஷன் சார்பாக அணைத்து மாநில தலைமை செயலாளர் மற்றும் சுகாதாரத்துறை அலுவர்களுக்கும் ஒரு சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. ஏற்கனவே கோவிஷில்டு தடுப்பூசி முதல் டோஸ் போட்டுக்கொண்டவர்கள் இரண்டாவது டோஸ் போட்டுக்கொள்ளவேண்டிய கால அவகாசம் 90 நாட்களாக உயர்த்தபட்ட நிலையில் ஆன்லைனில் பதிவு செய்தவர்கள் தேதியை மாற்றிக்கொள்ளவேண்டும் என்று தெரிவித்துள்ளது. ஏன்னென்றால் இதற்கு முன் இதன் கால இடைவெளி 28 நாட்களாக இருந்தது. தற்போது அதை 90 நாட்களாக உயர்த்தியுள்ளனர்.
அப்படி ஆன்லைனில் பதிவு செய்பவர்களுக்கு 84 நாட்களுக்கு பிறகே இரண்டாவது டோஸ் க்கான தேதி ஆன்லைனில் அப்லோட் செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளனர். ஏனென்றால் இத்தனை கால இடைவெளி இருந்தால் தான் கோவிஷில்டு வீரியத்துடன் செயல்படும் என்றும் ஆய்வுகளின் மூலம் கண்டுபிடித்துள்ளனர். எனவே கோவிஷில்டு முதல் டோஸ் போட்டு இரண்டாவது டோஸ்க்கு காத்து கொண்டிருப்பவர்களுக்கு 84 நாட்களுக்கு பிறகே கோவிஷீல்டு தடுப்பூசி போடப்படும்.
மேலும் 90 நாட்கள் கால இடைவெளி என்பது கோவிஷீல்டு தடுப்பூசிக்கு மட்டுமே ஒழிய வேறு எந்த தடுப்பூசிக்கும் இது பொருந்தாது என்றும் நேஷனல் ஹெல்த் மிஷன் தெரிவித்துள்ளது.