கோயம்பத்தூரில் ” கொரோனவை விரட்ட கொரோனா தேவி சிலை உருவாக்கப்பட்டுள்ளது. கோவையில் உள்ள இருகூர் காமாட்சிபுரம் 51வது சக்தி பீடம் ஆதினத்தில் கொரோனா தேவி சிலையை உருவாக்கியுள்ளனர்.
தமிழ்நாட்டில் கொரோனா இரண்டாம் அலை பரவி பெரிய பாதிப்பையும் மற்றும் ஆயிரக்கணக்காக மரணங்களையும் உண்டாகியுள்ளது. இதற்கு தீர்வு தெரியாமல் உலகமே ” தடுப்பூசி மற்றும் கட்டுப்பாட்டை நம்பியிள்ளது. இதன் காரணமாக இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு போடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலும் மே 10 முதல் 24 வரை ஊரடங்கு அறிவிக்கப்ட்டுள்ள நிலையில் ஊரடங்கு தொடரும் என கூறப்படுகிறது.
இந்நிலையில் மக்களை இந்த கொரோனா என்று அரக்கனிடம் இருந்த பாதுகாக்க உருவாக்கப்பட்ட அம்மன் தான் இந்த கொரோனா தேவி. கோவை இருகூர் காமாட்சிபுரம் 51வது சக்தி பீட ஆதின சுவாமிகள் சிவலிங்கேஸ்வரர் கூறுகையில் மக்கள் படும் பாடுகள் சொல்லி மாளவில்லை எனவும் இந்த கொரோனா தேவி சிலைக்கு 48 நாட்கள் யாகம் நடத்தவுள்ளதாகவும், அனால் அந்த யாகத்தில் பக்தர்கள் பங்கேற்கமாட்டார்கள் என்றும் கூறினார். இதனால் மக்கள் கொரோனா அச்சத்தில் இருந்து மீள்வார்கள் எனவும், கொரோனா அம்மன் மக்களை காப்பாற்றுவார் என்று கூறியுள்ளார்.
இந்த கொரோனா தேவி அம்மன் மக்களை காப்பற்றிவிடுவார் என்ற நம்பிக்கை மக்கள் மத்தியில் கூடினால் அம்மனை தரிசிக்க மக்கள் கூட்டம் அலைமோதாமல் இருந்தால் சரி !!