தமிழகத்தில் நாளுக்குநாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்றினால் மருத்துவமனைகள் முழுவதும் நிரம்பி வரும் நிலையில் கல்லூரி மற்றும் திருமண மண்டபங்களை கொரோனா வார்டாக மாற்றி வருகின்றனர். இந்நிலையில் நேற்று மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சுப்ரமணியன் சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள மீனாட்சி பொறியியல் கல்லூரியில் 100 படுக்கைகள் அமைத்து நேற்று அதை பயன்பாட்டுக்கு கொண்டுவந்தனர்.
பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் இன்னும் 3 நாட்களில் 18 வயது முதல் 45 வயது உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி ஆரம்பிக்கப்படும் என்றும் முதல்வர் அதை ஆரம்பித்து வைப்பர் ஏற்றும் கூறினார். மேலும் தமிழ்நாட்டில் நிலவும் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு நன்கு நாட்களில் தீரும் என்றும் சென்னையில் புதியதாக 250 அவசர ஆம்புலன்ஸ் ஊர்திகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. மேலும் 450 க்கும் அதிகமான 108 ஆம்புலன்ஸ் சேவைகள் தொடங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். கொரோனாவிற்கு ஒரே தீர்வு தடுப்பூசிதான். எனவே அடுத்த மூன்று மாதங்களில் 5 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்னன் கூறும் போது நோயாளிகள் தன்னிச்சையாக தங்கள் வீடுகளிலேயே ஆக்ஸிஜன் எடுத்து கொள்ள கூடாது என்றும் மருத்துவமனையில் மட்டுமே ஆக்ஸிஜன் எடுத்து கொள்ள வேண்டும் என்று கூறினார்.
சென்னை மாநகராட்சி கமிஷனர் கன் தீப் சிங்க் பேடி கூறும் பொது சென்னையில் ஒரு லட்சம் தடுப்பூசி கையிருப்பு இருப்பதாகவும் மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றும் அதுமட்டுமே ஒரே தீர்வு என்றும் கூறினார்.