இந்தியாவில் நாளுக்குநாள் கொரோனா தொற்று பெருகி வருகிறது. இதற்கு ஒரே தீர்வாக பார்க்கப்படுவது தடுப்பூசி மட்டும் தான். இந்நிலையில் மத்திய அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட பின் நல்ல வாசகத்துடன் சமூக வலைத்தளத்தில் பதிவிடுபவர்களுக்கு ரூ.5000 பரிசு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.
கொரோனா தடுப்பூசி:
முதலில் கொரோனா தடுப்பூசி 60 வயதுக்கு மேல் உள்ளவர்கள் போட்டு கொள்ள வேண்டும் என்று அரசு அறிவித்தது. பின்னர் 45 வயதுக்கு மேல் உள்ளவர்களும் போட்டு கொள்ளலாம் என்று கூறியது. பின்னர் 18 வயதுக்கே மேல் உள்ள அனைவர்க்கும் தடுப்பூசி போடப்படும் என்று கூறியது. ஆனாலும் தடுப்பூசிக்கு பயந்து கொண்டு இன்னும் பலர் போடுவதில்லை.
போட்டியில் வென்றால் பணம்:
எனவே எல்லாரும் தடுப்பூசி போடா வேண்டும் என்ற நோக்கில் இந்த முயற்சியை மத்திய அரசு கையில் எடுத்துள்ளது. தடுப்பூசி போட்டுகொண்டு நல்ல வாசகத்தை யார் சமூக வலைத்தளத்தில் பதிவிடுகின்றனரோ அவர்களுக்கு ரோபோ ரூ 5000 வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. மை கவர்மெண்ட் என்ற மத்திய அரசின் அதிகாரபூர்வ பக்கத்தில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தனது குடும்பத்தில் யாராவது தடுப்பூசி போட்டுக்கொண்ட போட்டோவை இணையத்தில் பகிர்ந்தாலும் அவர்களுக்கும் பரிசு வழங்கப்படும்.