ஒருவர் தமக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பதை தொண்டை கரகரப்பு, தொண்டை எரிச்சல், தொண்டை உலர்ந்துபோதல், வறட்டு இருமல், அதிக உடல் வெப்பநிலை, மூச்சுவிடுவதில் சிரமம், வாசனை மற்றும் சுவை இழப்பு மூலம் அறிந்து கொள்ளலாம். கொரோனா தொற்று ஏற்பட்ட மூன்றாவது நாளில் இருந்து அறிகுறிகள் தென்பட ஆரம்பிக்கின்றன.
கொரோனா தொற்று முதல் கட்டம்- முதல் மூன்று நாள் அறிகுறிகள்:
- உடல்வலி
- கண் எரிச்சல்
- தலைவலி
- வாந்தி
- மூக்கு ஒழுகுதல்
- காய்ச்சலாக உணர்தல்
- தொண்டைப்புண்
கொரோனா தொற்றின் முதல் கட்டமாக மேலே சொன்ன அனைத்தும் ஏற்படும். இப்படி அறிகுறி இருக்கும் போது அதிகளவு நீரையும் திரவங்களையும் எடுத்துக்கொள்ள வேண்டும். அதிகளவு நீர் எடுத்து கொள்வது தொண்டை உலராமலும் நுரையீரலையும் சுத்தம் செய்ய உதவும்.
கொரோனா தொற்றின் இரண்டாம் கட்டம் – நான்காம் நாள் முதல் 8ம் நாள் வரை:
நான்காம் நாள் முதல் 8ம் நாள் வரை உள்ள இரண்டாம் கட்டத்தில்,
- வாசனை இழப்பு,
- சுவை வாசனை இரண்டுமே தெரியாமல் போதல்,
- சோர்வு ஏற்படுதல்,
- நெஞ்சுப்பகுதியில் வலி ஏற்படுதல்,
- சிறுநீரகப் பகுதியில் வலி ஏற்படும்.
- மேலும் ரத்தத்தின் தரம் பாதிக்கப்படும்.
கொரோனா தொற்றின் மூன்றாம் கட்டம் – 9ம் நாள் முதல் 14ம் நாள் வரை:
ஒன்பதாம் நாள் முதல் கொரோனா தொற்றின் மூன்றாம் கட்டம் ஆரம்பிக்கிறது. இந்த நாளிலிருந்து தொற்று குணமடைய ஆரம்பிக்கும் என்பதால். எந்த அளவுக்கு சீக்கிரம் சிகிச்சை எடுக்க ஆரம்பிக்கிறோமோ அந்த அளவுக்கு சீக்கிரம் சுகம் காண முடியும்.
என்ன செய்ய வேண்டும்:
- 15 முதல் 20 நிமிடங்கள் சூரிய ஒளியில் இருத்தல்
- 7 முதல் 8 மணி நேரம் ஓய்வு எடுத்தல்
- ஒவ்வொருநாளும் குறைந்தது ஒன்றரை லிட்டர் நீர் அருந்துதல்
- சூடான உணவுகளை எடுத்துக்கொள்ளுதல்
- அதிக PH மதிப்பு கொண்ட உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
மேலே சொன்ன அனைத்து நடவடிக்கைளை பின்பற்றும் போது சீக்கிரமே கொரோனா தொற்றிலிருந்து மீண்டு விடலாம்.