இந்தியாவில் கொரோனா தொற்று நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் சின்ன அறிகுறி இருந்தாலே கொரோனா தொற்று இருக்குமோ என்ற பயத்துடன் டெஸ்ட் எடுக்க மக்கள் மருத்துவமனைக்கு கூட்டம் கூட்டமாக செல்கின்றனர். இனி இந்த பயம் இல்லை வெறும் 450 ரூபாயில் வீட்டிலிருந்த படியே கொரோனா டெஸ்ட் எடுப்பதற்கு புனேவில் உள்ள My Lab Discovery solution நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. இதை சில நிபந்தனைகளுடன் பயன்படுத்தலாம் என்று ICMR தெரிவித்துள்ளது.
Coviself:
அதற்கு coviself என்று பெயரிட்டுள்ள அந்த நிறுவனம் வீட்டிலிருந்த படியே கொரோனா பரிசோதனையை மேற்கொள்ளலாம் என்று கூறுகிறது. 450 ரூபாய்க்கு கிடைக்கும் இதில் கருவியை பயன்படுத்தும் கையேடு மூக்கில் இருந்து மாதிரிகளை சேகரிக்கும் குச்சிகள், மருந்து திரவம் அடங்கிய குப்பி மாதிரியை சோதிக்கும் சிறிய பட்டை ஒன்று இருக்கும். கொரோனா சோதனையை மேற்கொள்வதற்கு முன்பாக பிலே ஸ்டோரில் My Lab coviself என்ற அப்ப்ளிகேஷனை இன்ஸ்டால் செய்ய வேண்டும். அதிலுள்ள விவரங்களை பூர்த்தி செய்ய வேண்டும். கருவியில் உள்ள QR code ஐ ஸ்கேன் செய்ய வேண்டும்.
எப்படி பயன்படுத்துவது:
முதலில் சளி மாதிரியை சேகரித்து சோதனையிடும் சிறிய குப்பியில் உள்ள திரவம் கீழே படியும் வரை மென்மையாக தட்ட வேண்டும்.
பின்னர் அதன் மூடியை நீக்கிவிட்டு குப்பியை கையில் பிடித்துக்கொள்ள வேண்டும். தற்போது மாதிரியை சேகரிக்க தரப்பட்டுள்ள குச்சிகளை உறையில் இருந்து வெளியே எடுத்து கொள்ள வேண்டும்.
குச்சியின் மறுமுனைகளில் விரல்கள் படாமல் பார்த்து கொள்ள வேண்டும். பிறகு மூக்கின் இரண்டு துவாரங்களில் வழியே சளி மாதிரி சேகரிப்பு குச்சியினை மூக்கின் உள்பக்கத்தை தொடும் வரை செலுத்தி தலா 5 முறை மென்மையாக திருக வேண்டும்.
இந்த சளி மாதிரியை மருந்து திரவம் அடங்கிய குப்பியினுள் செலுத்த வேண்டும். சேகரிக்கப்பட்ட மாதிரி அதில் நன்றாக கலந்து இருப்பதை உறுதி செய்து கொண்டு குச்சியை நன்றாக முழ்கி இருக்குமாறு உடைத்து விட விட்டு குப்பியை மூடிவிட வேண்டும்.
இதை அடுத்து கொரோனா சோதனையை உறுதி செய்யும் பட்டையை எடுத்து குப்பியில் இருக்கும் மாதிரி திரவத்தை இரண்டு சொட்டுகள் ஊற்ற வேண்டும்.
அடுத்த 15 நிமிடத்தில் My Lab coviself ஆப் மூலம் உங்கள் மொபைலுக்கு வந்து விடும். தொற்றை உறுதி செய்யும் பட்டையில் C மற்றும் T அடையாளங்கள் இருக்கும். C என்ற பகுதியில் கோடு தென்பட்டால் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்று அர்த்தம்.
C மற்றும் T பகுதியில் கோடுகள் தென்பட்டால் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி.
சாதாரண அறிகுறி உள்ள நோயாளிகள் சீக்கிரமே தொற்றை உறுதி செய்து கொள்ள My Lab coviself பயன்படுத்தி கொள்ளலாம்.