திமுக தேர்தல் பிரச்சாரத்தின் பொத்து திமுக வென்று வந்தால் கொரோனா நிவாரண நிதியாக கலைஞர் பிறந்தநாள் அன்று ரூ 4000 வழங்கப்படும் என்று மு க ஸ்டாலின் கூறி இருந்தார். இந்நிலையில் திமுக கடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. மு க ஸ்டாலின் முதல்வர் பதவி ஏற்று கொண்டதும் கொரோனா தொற்றின் மூலம் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட அனைவர்க்கும் நிவாரணம் வழங்கப்படும் என்று கூறினார்.
அதன் அடிப்படையில் கொரோனா தொற்று பெருகி வருவதால் முன் கூட்டியே முதல் தவணையாக ரூ 2000 த்தை வழங்க உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் கடந்த வாரத்திலிருந்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு குறிப்பாக அரிசி கார்டுகளுக்கு ரூ 2000 வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் புதியதாக குடும்ப அட்டை வாங்கியுள்ளவர்களுக்கும் ரூ 4000 நிவாரண தொகை வழங்கப்படும் என்றும் அதில் முதல் தவணையாக ரூ 2000 வழங்கப்படும் என்றும் முதல்வர் தெரிவித்தார். இதன் மூலம் 2,14,950 புதிய அரிசி அட்டைதாரகளுக்கு ரூ 2000 வழங்கப்பட இருக்கிறது. இதற்கு 42.99 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாக முதல்வர் தெரிவித்தார்.