கவர்ச்சி நடிகையாக கொடிகட்டி பறந்தவர் நடிகை ஷகிலா. இவர் நடித்த படங்களுக்கு ஏங்காத இளைஞர் பட்டாளமே இல்லை. தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்றிலும் இவருக்கு தனி மவுசு தான். இவரது கவர்ச்சி படத்திற்கு இளைஞர் முதல் வயது வித்தியாசமில்லால் ரசிகர்கள் உண்டு. இன்றும் இவர் நடித்த கவர்ச்சி படங்களை தேடி பார்த்து வருகின்றனர் இளைஞர்கள் என்பதில் சந்தேகமில்லை.
இந்நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய குக் வித் கோமாளி ஷோ பகுதி 1 பட்டிதொட்டி முதல் பட்டையை கிளப்பியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பகுதி 1க்கு கிடைத்த மாபெரும் வரவேற்பை தொடர்ந்து பார்ட் 2 எடுக்கப்பட்டது. அது விஜய் டிவி வரலாற்றிலே இல்லாத அளவுக்கு வரவேற்பையும் பாராட்டையும் பெற்றது. அதில் பங்கு கொண்டார் நடிகை ஷகிலா அவர்கள். அதில் அவர் பங்கேற்ற விதம் நடந்து கொண்ட பாங்கு அணைத்தும் ரசிகர்ளை வெகுவாக கவர்ந்தது. அது மட்டுமில்லாமல் கோமாளிகளாக வந்த பாலா, புகழ், மணிமேகலை அனைவராலும் அம்மா என்றே பாசமாக அழைக்கப்பட்டார் ஷகிலா.
இதனால் மக்கள் மத்தியில் அவர் கவர்ச்சி நடிகை என்ற பெயர் மறந்து போகும் இடமெல்லாம் ஷகிலா அம்மா என்றும் சமூக வலைத்தளங்களில் ஷகிலா அம்மா என்றே ட்ரெண்ட் ஆனார். இந்நிலையில் வழக்கம் போல் ஷகிலா அவர்களுக்கு பட வாய்ப்பு வந்தது. கதையை கேட்ட ஷகிலா அந்த படத்தில் நடிக்கமாட்டேன் என கூறியுள்ளார்.
ஏன் அந்த படத்தில் நடிக்கவில்லை என கேட்டதற்கு என்னை ரசிகர்கள் இப்பொழுது அம்மா என்றே அழைக்கின்றனர். இந்நிலையில் அந்த படத்தில் குளியல் காட்சி சீன் ஒன்று உள்ளதாம். அதில் நான் குளிப்பது போல் கவர்ச்சியாக படமெடுக்க வேண்டும் என கேட்டனர். நான் இனி அப்படி நடிக்க போவதில்லை. எனது ரசிகர்களின் அந்த அம்மா என்ற வார்த்தைக்காகவே வாழப்போகிறேன் என கூறியுள்ளார். நல்ல கதாபாத்திர கதையாக இருந்தால் நடிப்பேன் என கூறியுள்ளார்.
இதைக்கேட்ட ரசிகர்கள் மத்தியில் “ஷகிலா அம்மாவின் மேல் உள்ள மரியாதை இன்னும் கூடியுள்ளது குறிப்பிட தக்கது.