1st டெஸ்ட்: ENG VS NZ – அறிமுக போட்டியில் கான்வே அசத்தல் சதம்!!

0
36
Facebook
Twitter
WhatsApp
Telegram

இங்கிலாந்து மற்றும் நியூஸிலாந்து இடையே முதல் டெஸ்ட் போட்டி லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கியது. அறிமுக போட்டியிலேயே சதம் அடித்து அசத்தினார் கான்வே. முதல் நாள் போட்டியின் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 246 ரன்கள் குவித்தது நியூஸிலாந்து.

டாஸ் வென்று பேட்டிங் தேர்வு:

நியூஸிலாந்து கேப்டன் வில்லியம்சன் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தார். அந்த அணியில் போல்ட்க்கு ஓய்வு கொடுக்கப்பட்டது. இங்கிலாந்து அணியில் புதியதாக வேகப்பந்துவீச்சாளர் ராபின்சன் மற்றும் விக்கெட் கீப்பர் ஜேம்ஸ் பிரசி சேர்க்கப்பட்டனர். தொடக்க ஆட்டக்காரர்களாக கான்வே மற்றும் லதாம் அணிக்கு சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். அவர்கள் முதல் விக்கெட்டுக்கு 58 ரன்கள் சேர்த்த போது ராபின்சன் பந்தில் லதாம் அவுட் ஆனார். பின்னர் அணியின் கேப்டன் வில்லியம்சன் களமிறங்கினார். சற்று தாக்குப்பிடித்து ஆடிய வில்லியம்சன் 13 ரன்கள் எடுத்து இருக்கும் போது ஆண்டர்சன் பந்தில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.

கான்வே அபாரம்:

கான்வே

பின்னர் அனுபவ ரோஸ் டெய்லர் கான்வே உடன் சேர்ந்தார். இந்நிலையில் கான்வே தனது முதல் அரைசதத்தை பதிவு செய்தார். பின்னர் டெய்லர் 14 ரன்களுக்கு ஆட்டமிழக்க அணியின் ஸ்கோர் 114 ரன்களுக்கு 3 விக்கெட் என்று இருந்தது. அதன்பின் கான்வே உடன் ஜோடி சேர்ந்தார் நிக்கோலஸ். இருவரும் பொறுமையாகவும் அதே வேளையில் தவறான பந்துகளை அடித்தும் ஆடினார். இதனால் அணியின் ஸ்கோர் மெல்ல உயர்ந்தது.

அறிமுகப்போட்டியில் சதம்:

மிகவும் சிறப்பாக ஆடிய கான்வே தன்னுடைய முதல் போட்டியிலேயே சதம் அடித்து அசத்தினார். அதிலும் பிராட் மற்றும் ஆண்டர்சன் போன்ற உலகத்தரம் வாய்ந்த பந்து வீச்சாளருக்கு எதிராக முதல் போட்டியிலேயே சதம் அடிப்பது மிக அசாத்தியமானது. இவர் 163 பந்துகளில் தனது சத்தத்தை பூர்த்தி செய்தார். இவர் விளையாடியது பார்க்கும் போது இது அவருக்கு முதல் போட்டி போல இல்லை. அனுபவம் வாய்ந்த பேட்ஸ்மேன் போல விளையாடினார்.

Must Read: அட்ராசக்க மூன்று அதிரடி திட்டம் – தமிழக அரசு அறிவிப்பு!!

நல்ல நிலையில் நியூஸிலாந்து:

கான்வே மற்றும் நிக்கோலஸ் இணைந்து அணியை நல்ல நிலைக்கு உயர்த்தினார். முதல் ஆட்ட நேரம் முடியும் வரை அதன் பின் விக்கெட் விழவில்லை. நான்காவது விக்கெட்டுக்கு இருவரும் 132 ரன்கள் எடுத்து அட்டமிழக்காமல் இருக்கின்றனர். முதல் நாள் ஆட்ட நேரமுடிவில் நியூஸிலாந்து அணி 3 விக்கெட் இழப்புக்கு 246 ரன்கள் எடுத்துள்ளது. கான்வே 136 ரன்களுடனும் நிக்கோலஸ் 46 ரன்களுடனும் ஆடிக் கொண்டிருக்கின்றனர்.

பந்துவீச்சு எடுபடவில்லை:

கான்வே

இங்கிலாந்து அணியின் பந்து வீச்சு அந்த அளவுக்கு எடுபடவில்லை. குறிப்பாக பிராட் விக்கெட் எதுவும் வீழ்த்தவில்லை. அந்த அணியின் அறிமுக வீரர் ராபின்சன் 2 விக்கெட்டும் ஆண்டர்சன் 1 விக்கெட்டும் வீழ்த்தினர். மேலும் மைதானம் சூழல் பந்துவீச்சுக்கு சாதகமாக இருப்பதுபோல் தெரிகிறது. ஆனால் இங்கிலாந்து அணியில் எந்த சுழற்பந்துவீச்சாளரும் இல்லை. எனவே நியூஸிலாந்து அணியை எப்படி சமாளிக்க போகிறது என்று தெரியவில்லை.

ஸ்கோர் சுருக்கம்:

நியூஸிலாந்து- 246/3 (கான்வே 136, நிக்கோலஸ் 46; ராபின்சன் 50/2, ஆண்டர்சன் 55/1

இது போன்ற செய்திகளுக்கு எங்களது இணையதளத்தை Follow செய்யுங்கள் – times tamil

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here