1st Test: ENG vs NZ – கான்வே இரட்டை சதம், அணியை காப்பாற்றிய ரூட், பர்ன்ஸ் !!

1
69
Facebook
Twitter
WhatsApp
Telegram

இங்கிலாந்து மற்றும் நியூஸிலாந்து மோதும் முதல் டெஸ்ட் போட்டியில் இரண்டாவது நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 2 விக்கெட் இழப்புக்கு 111 ரன்கள் எடுத்தது. முதல் இன்னிங்சில் கான்வே இரட்டை சதம் எடுத்து அசத்தினார்.

இரண்டாவது நாள் ஆட்டம்:

முதல் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 246 எடுத்து இருந்தது. அதனை தொடர்ந்து ஆடிய அந்த அணி சிறப்பாக ஆடியது. அந்த அணியின் நிக்கோலஸ் அரை சதம் அடித்தார். அவர் 61 ரன்களில் ஆட்டமிழந்தார். நான்காவது விக்கெட்க்கு கான்வே மற்றும் நிக்கோலஸ் இணை 174 ரன்கள் சேர்த்தது. நிக்கோலஸ் விக்கெட் விழுந்ததும் விக்கெட் சரிய ஆரம்பித்தது. வாட்லிங் 1, கொலின் 0, சட்னர் 0, ஜேமிசன் 9, சௌதீ 8, என விக்கெட் சரியாய் ஒரு கட்டத்தில் நல்ல நிலையில் இருந்த நியூஸிலாந்து அணி 338 க்கு 9 விக்கெட் என்ற நிலைக்கு சென்றது.

Must Read: நாடு முழுவதும் சைக்கிளுக்கு மாறிய அதிசயம் : எப்படி மாறியது இந்த நாடு ?

கான்வே இரட்டை சதம்:

eng vs nz

ஒருபுறம் விக்கெட் சரிந்தாலும் மறுபுறம் தனது நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அறிமுக போட்டியிலேயே இரட்டை சதம் எடுத்து அசத்தினார். அறிமுக போட்டியிலேயே இரட்டை சதம் அடிக்கும் 7 வது ஆட்டக்காரர் ஆனார். நியூஸிலாந்து அணியின் சார்பில் அறிமுக போட்டியில் இரட்டை சதம் அடிக்கும் இரண்டாவது ஆட்டக்காரர். இதற்கு முன் நியூஸிலாந்து அணியின் மாத்தியூ சிங்களர் 1990ம் ஆண்டில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அறிமுக போட்டியில் இரட்டை சதம் அடித்து இருந்தார்.

அசத்தல் பௌலிங்:

eng vs nz

நியூஸிலாந்து அணியின் பேட்டிங்கை பார்க்கும் போது அந்த அணி கண்டிப்பாக 500 ரன்களுக்கும் மேலாக அடிக்கும் என்று எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் இங்கிலாந்து அணியின் சிறப்பான பௌலிங் மூலம் 378 ரன்களுக்கு ஆல் அவுட் ஆக்கியது. கான்வே 200 ரன்களில் ரன் அவுட் ஆனார். இங்கிலாந்து அணியின் சார்பாக ராபின்சன் 4 விக்கெட்டும், மார்க் வுட் 3 விக்கெட்டும், ஆண்டர்சன் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

ஆரம்பம் சொதப்பல்:

முதல் இன்னிங்க்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணிக்கு ஆரம்பம் ரொம்ப மோசமாக அமைந்தது. டொமினிக் சிப்லே 0, மற்றும் க்ராவ்லே 2 ரன்களில் ஆட்டமிழக்க அந்த அணி 18 ரன்களுக்கு 2 விக்கெட் என்ற மோசமான நிலைக்கு சென்றது. அணியை காப்பாற்ற கேப்டன் ரூட் மற்றும் பர்ன்ஸ் இணைந்தனர். இந்த பார்ட்னர்ஷிப் மூலமாக அணியின் ஸ்கோர் உயர்ந்தது.

பர்ன்ஸ் அரைசதம்:

eng vs nz

சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பர்ன்ஸ் அரைசதம் எடுத்தார். இந்த இணை இரண்டாம் நாள் ஆட்டம் முடியும் வரை விக்கெட்டை பறிகொடுக்காமல் இருந்தது. இங்கிலாந்து அணி ஆட்டநேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 111 ரன்கள் எடுத்துள்ளது. பர்ன்ஸ் 59 ரன்களுடனும், ரூட் 42 ரன்களுடனும் களத்தில் இருக்கின்றனர். நியூஸிலாந்து அணியின் சார்பாக ஜேமிசன் 1, மற்றும் சௌதீ 1, வீழ்த்தினர்.

இது போன்ற செய்திகளுக்கு எங்களது இணையதளத்தை Follow செய்யுங்கள்Times Tamil

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here