இந்தியாவில் கொரோனாவின் இரண்டாம் அலை பரவி பாதிப்பும், இறப்பும் அதிகரித்து வரும் நிலையில் அனைத்து அலுவலகங்கள், தொழிற்சாலைகள், மற்றும் கல்வி நிறுவனங்கள் போன்ற அனைத்தும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு மூடப்பட்டுள்ளது . மருத்துவமனைகள், மருந்து உற்பத்தி தொழிற்சாலைகள், மற்றும் மெடிக்கல் ஷாப் , வங்கிகள், மக்கள் முக்கிய அத்தியாவசிய நிறுவனங்கள் மற்றும் நாட்டு மருந்து கடைகள் போன்றவற்றிக்கு தளர்வுகளோடு இயங்கி வருகிறது.
தற்போது முழுஊரடங்கு காலத்தில் வங்கிகள் பொதுமக்கள் பயனுள்ள வகையில் காலை 9 மணிமுதல் மாலை 2 மணிவரை இயங்குகிறது. ஆனால் நேரத்தில் மாற்றமாக காலை 9 மணிமுதல் காலை 11 மணிவரை செயல் பட வேண்டும் என அறிவுறுத்தபட்டு வருகிறது.
தமிழக அரசுக்கு இந்திய வங்கி அலுவலக அசோசியேஷன் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. அதில் வங்கிகள் வேலை நேரமானது இனி காலை 9 மணியிலிருந்து காலை 11 மணியுடன் முடிக்கவும், மற்றும் 12 வரை திறந்திருக்க உத்தரவு வேண்டும் எனவும், அதுமட்டுமில்லாது வாரத்தில் திங்கள், புதன், வெள்ளி போன்ற கிழமைகளில் மட்டும் வாங்கி திறந்திருக்கவும் வேண்டும் என உத்தரவு போடுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
வங்கிகளில் முக்கிய தேவையான வைப்பு, பணம் அனுப்புதல் மற்றும் அரசு வணிகம் தொடர்பான பணிகள் மட்டுமே அனுமதிக்க வேண்டும் எனவும், அனைத்து வங்கி ஊழியர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளதா என உறுதி படுத்துமாறும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இனி ஒருநாள் விட்டு ஒருநாள் வேலை நாள் வங்கிகளில் தமிழக அரசு சார்பாக அறிவிக்கப்படுமா தெரிவிக்கப்படுமா?? என எதிர்பார்க்கப்படுகிறது.