தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பரவி வரும் நிலையில் இந்த ஆண்டு +12 தேர்வுகள் இன்னும் நடத்தப்படாமல் உள்ளது. இந்நிலையில் வாட்சப்பில் அலகு தேர்வு நடத்தபடம் என்று அரசு தேர்வுகள் இயக்கம் அறிவித்துள்ளது.
வாட்சப் வழியாக ஒரு குழு ஏற்படுத்தி வினாத்தாள்களை வாட்சப்பில் பகிர்ந்து அதன் மூலம் தேர்வு நடத்த வேண்டும் என்று அரசு தேர்வுகள் இயக்கம் அறிவித்துள்ளது. வாட்சப்பில் குழு ஏற்படுத்தும் போது மாணவர்களுக்கு தனியாகவும் மாணவியருக்கு தனியாகவும் ஏற்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அப்படி ஏற்படுத்தும் குழுக்குகளில் ஆசிரியர்கள் வினாத்தாளை பதிவிட வேண்டும் என்றும் மாணவர்கள் அந்த வினாத்தாளை பார்த்து தனியாக பெற்றோரின் முன்னிலையில் எழுதி, பெற்றோரின் கையொப்பம் பெற்று அதை போட்டோ எடுக்க வேண்டும். பின்னர் அவற்றை PDF பைலாக மாற்றி மீண்டும் அதே வாட்ஸாப்ப் குழுவில் பதிவிட வேண்டும் என்று அரசு தேர்வுகள் இயக்கம் அறிவித்துள்ளது.
அவ்வாறு பெறப்படும் விடைத்தாள்களை ஆசிரியர்கள் வாட்ஸாப் வழியாகவே திருத்தி அதன் மதிப்பெண்களை அந்த வாட்சப் குழுவிலேயே பதிவிட வேண்டும் என்று வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்துள்ளது. அதே போல் இந்த குழுவில் வேறு எந்த பதிவுகளையோ விடீயோவையோ பதிவிட கூடாது என்றும் சொல்லப்பட்டு இருக்கிறது. இந்த வழிமுறைகளை பயன்படுத்தி அலகு தேர்வுகளை நடத்த வேண்டும் என்று அரசு தேர்வுகள் இயக்கம் தமிழ்நாடு முழுவதும் அணைத்து மேல்நிலை பள்ளிகளுக்கும் வழிகாட்டு முறைகளை அனுப்பியுள்ளது. .இந்த வழிமுறையை பயன்படுத்தி தான் வருகிற திருப்புதல் தேர்வையும் நடத்த வேண்டும் என்றும் அரசு தேர்வுகள் இயக்கம் அறிவித்துள்ளது.