Breaking: +2 தேர்வு ரத்து – தமிழக அரசு அதிரடி உத்தரவு – நீட் தேர்வு ரத்து?

0
20
Facebook
Twitter
WhatsApp
Telegram

தமிழ்நாட்டில் +2 தேர்வு ரத்து செய்யப்படுவதாக தமிழ்நாடு அரசு உத்திரவிட்டுள்ளது. CBSE +2 தேர்வை ஏற்கனவே மத்திய அரசு ரத்து செய்ததை தொடர்ந்து தமிழ்நாடு அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

செய்தி சுருக்கம்:
 1.+2 தேர்வு ரத்து - தமிழ்நாடு அரசு உத்தரவு 
 2. மதிப்பெண் எப்படி கணக்கிடுவார்கள்?
 3. தமிழ்நாட்டில் நீட் தேர்வு நடக்குமா? 

+2 தேர்வு ரத்து:

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று அதிகம் காணப்படுவதால் +2 தேர்வு ரத்து செய்யப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. ஏற்கனவே CBSE +2 தேர்வை மத்திய அரசு ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது. மாணவர்களின் உடல் நலமே முக்கியம் மற்றும் ஒரு நாள் தேர்வு வைத்தாலும் அதன் மூலம் தொற்று பரவுவதற்கு வாய்ப்பு அதிகம். அதை கருத்தில் கொண்டே தேர்வு ரத்து செய்யப்படுவதாக கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார். சில தினங்களாக ட்விட்டரில் நடத்திய கருத்துக்கணிப்பில் 78 % மக்கள் தேர்வு வேண்டாம் என்று கருத்து தெரிவித்து இருக்கின்றனர். வெறும் 20% மக்கள் மட்டுமே தேர்வு வேண்டும் என்று கூறி இருக்கின்றனர்.

+2 exam cancelled

பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறும்போது மக்கள் கருத்து தெரிவிப்பதற்காக மெயில் ஐடி மற்றும் ஹெல்ப் லைன் நம்பர் கொடுக்கப்பட்டது. அதில் 75% க்கும் அதிகமான மக்கள் தேர்வு வேண்டாம் என்று தெரிவித்து இருந்தனர். அதன் ரிப்போர்ட்டை முதல்வரிடம் கொடுத்தோம். அவர் தான் மாணவர்கள் நலன் தான் முக்கியம். என்னுடைய ஆட்சியில் யாரும் பாதிக்கப்பட கூடாது என்று கூறி இந்த முடிவை எடுத்தார்.

மதிப்பெண் கணக்கீடு:

எப்படி மதிப்பெண்ணை கணக்கீடுவீர்கள் என்ற கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், அதற்காக தனி கமிட்டி அமைத்துள்ளோம். மாணவர்களுக்கு எப்படி மதிப்பெண் கொடுப்பது என்று ஆராய்ந்து பின் அறிவிக்கப்படும். +2 தேர்வு முக்கியமான தேர்வு என்றும் மேற்படிப்புக்கு செல்லும் மாணவர்கள் எவரும் பாதிக்க கூடாது என்றும் கூறினார். +2 தேர்வு மூலம் பொறியியல் மற்றும் மருத்துவ படிப்புக்கு செல்வர். தற்போது தேர்வு ரத்து செய்யப்பட்டதால் எதன் அடிப்படையில் அவர்களது சேர்க்கை இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் மாணவர்களின் எதிர்காலம் முக்கியம். அவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படாமல் முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

நீட் தேர்வு ரத்து:

+2 exam cancelled

மேலும் +2 படிப்புக்கு பின் நிறைய மேற்படிப்புக்கு தகுதி தேர்வு என்பது முக்கியம். குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் மருத்துவம் படிக்க நீட் தேர்வு எழுத வேண்டியது அவசியம். ஆனால் தற்போது +2 தேர்வு ரத்து செய்யப்பட்டதால் நீட் தேர்வையும் ரத்து செய்யவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. புதிதாக பதவியேற்ற திமுக அரசு நீட் தேர்வுக்கு விலக்கு வாங்கி தருவோம் என்று கூறியது. இதற்கு பதிலளித்த அமைச்சர் ஆரம்பத்திலிருந்தே எங்களுடைய கொள்கை நீட் தேர்வுக்கு எதிரானது. இன்னமும் முதல்வர் அதே நிலையிலே உள்ளார். நிச்சயமாக நீட் தேர்வை ரத்து செய்வோம். தற்போது அது குறித்து ஆலோசனை செய்து முடிவு செய்வோம் என்று கூறினார்.

இது போன்ற செய்திகளுக்கு எங்களது இணையதளத்தை Follow செய்யுங்கள் – Times Tamil

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here