வேலைக்காரியிடம் அந்த ரகசியத்தை சொன்ன வெண்பா! – Bharathi Kannamma Serial Today Episode 19/08/2021

0
16
Facebook
Twitter
WhatsApp
Telegram
Join @ Times Tamil on Telegram

பாரதி கண்ணம்மா!

பாரதியின் வீட்டில் லட்சுமி ஸ்டெதஸ்க்கோப்பை வைத்து விளையாண்டு கொண்டு இருக்கிறாள். மேலும் அந்த ஸ்டெதஸ்க்கோப்பை பாரதிக்கு வைத்து அவரின் இதயத்துடிப்பை கேட்கிறாள். மேலும் இதை என்னுடைய அம்மாவிற்கு வைத்து பார்த்தால் சூப்பராக இருக்கும் என்று கூறுகிறார். அப்பொழுது பாரதி உன் அம்மாவிற்கு தான் இதயமே இல்லையே என்று பாரதி தன் மனதிற்குள்ளேயே நினைத்து கொள்கிறார். எனினும் கண்ணம்மா மீது தான் முழு தப்பு என்றும் ஒருபோதும் அதை குழந்தையான லட்சுமி மீது காட்டிவிட கூடாது என்றும் கவனமாக இருக்கிறார்.

பயப்படும் குடும்பத்தார்!

பாரதி, ஏன் இப்படி நடந்து கொள்கிறான் என்று யோசிக்கும் போது, ஒருவேளை பாரதிக்கு கண்ணம்மாவின் பொண்ணு தான் லட்சுமி என்பது தெரிந்து இருக்குமோ! என சந்தேகப்படுகின்றனர். வெண்பா ஒருவேளை பாரதியிடம் போட்டு விட்டு இருப்பாளோ? என யோசித்து கொண்டே இருக்கின்றனர். ஏற்கனவே கண்ணம்மா தான் சமயலம்மா என அவனுக்கு தெரிந்தவுடன் எப்படி சண்டை போட்டான்! என சௌந்தர்யா குடும்பத்தார் அனைவருக்கும் நினைவு கூறுகிறார்.

கனவுல நீங்க கடிச்சு வச்ச காயம் வலிக்கிறதே! என் மாமா!!! – சோக்காக சொன்ன ராஜா ராணி வில்லியால் சொக்கி போன ரசிகர்கள்!

குஷியான வெண்பா!

நீங்கள் இவ்வளவு ஹாப்பியாக இருப்பதற்கு காரணம் என்ன என்று அவரது வேலைக்காரி கேட்கும் போது., ஆமா! பழத்தை வெட்டி பாலில் போட்ட கதையாக, அஞ்சலி இந்த உலகத்தை விட்டே போக போகிறாள் என மிகவும் சந்தோசமாக கூறுகிறாள். அது எப்படி உங்களுக்கு தெரியும் என கேட்ட வேலைக்காரியிடம், அவள் தான் சொல்ல வேண்டாம் என கூறியதை வெண்பா கலாய்த்து கொண்டே., தன் உயிரை கொடுத்தாவது ஒரு குழந்தையை பெற்று கொடுக்க வேண்டும் என கூறுவதை சொல்கிறாள்.

ஹேமா மற்றும் லட்சுமியை தன் பக்கம் இழுத்த வெண்பா!! – வெளியான ரீல்ஸ் வீடியோ உள்ளே!

நொந்து போன பாரதி!

கண்ணம்மா லட்சுமியின் பள்ளிக்கு வரும் போது ஹேமா இங்கு தான் படிக்க போகிறாள் என்ற உண்மை அவருக்கு தெரிய வருகிறது. இதை கேட்ட கண்ணம்மாவின் மனம் வேதனையிலும் மகிழ்கிறது. இதை முதலில் ஹேமாவிடம் சொல்ல வேண்டும் என நினைக்கிறாள். லட்சுமியும் இதை கேட்டால் மிகவும் சந்தோசப்படுவான் என நினைத்து கொண்டே செல்கிறார். மிகவும் குழம்பி போன பாரதி, எனக்கு என்று சப்போர்ட் செய்ய யாருமே இல்லை! என்னோட அதிகபட்ச ஆசையே என் குடும்பத்துக்காக வாழ வேண்டும் என்பது தான்!! ஆனால் திரும்ப திரும்ப எல்லாரும் என்ன ஏமாற்றி கொண்டே தான் இருக்கிறார்கள் என பாரதி வெண்பாவிடம் புலம்பும் காட்சியுடன் இன்றைய பாரதி கண்ணம்மா சீரியல் முடிவடைகிறது.

டைம்ஸ் தமிழ் பேஸ்புக் பக்கத்தில் இணைய இங்க கிளிக் செய்யுங்க!!


டைம்ஸ் தமிழின் வாட்சப் குரூப்பில் இணைய இங்க கிளிக் செய்யுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here