பாரதி கண்ணம்மாவில் இன்று!
சௌந்தர்யா கண்ணம்மாவிற்கு போன் செய்கிறார். போனை அட்டன் செய்து பதட்டம் அடைந்த கண்ணம்மா லட்சுமி அங்க இருக்காளா? என்று கேட்கிறார். லட்சுமி இங்கே தான் இருக்கிறாள் சௌந்தர்யா சொன்னதும், லட்சுமி என்னுடைய பொண்ணு என்ற உண்மை பாரதிக்கு தெரிந்துவிட்டதா? என்று பயத்தோடும் பதட்டத்தோடும் கேட்கும் போது, நீ வீட்டிற்கு வா பாத்துக்கலாம் என்று சௌந்தர்யா கூறுகிறார்.
மனம் வருந்திய கண்ணம்மாவின் அப்பா!
கண்ணம்மாவின் அப்பா, லட்சுமி கண்ணம்மாவின் குழந்தை என்று தெரிந்ததும் மகிழ்ச்சி அடைந்தாலும் கூட,என் பொண்ணோட நிலைமை தான் இப்படி ஆகிவிட்டது என்றால் என் பேத்தியுடைய நிலைமையும் இப்படி ஆகிவிட்டதே! என்று நினைத்து கண் கலங்குகிறார். மேலும் கண்ணம்மா பிறந்ததில் இருந்து அவளுடைய வாழ்க்கையில் சுத்தமாக நிம்மதியே இல்லை என்று கூறி மிகவும் வருத்தம் அடைகிறார். லட்சுமி தன்னுடைய சொந்த பொண்ணு என்று தெரியாமலேயே அவன் லட்சுமி மீது அவ்வளவு பாசம் வைத்து இருக்கிறான் என்று சௌந்தர்யா கண்ணம்மாவின் அப்பாவிடம் கூறுகிறார்.
லட்சுமிக்கும் உனக்கும் என்ன உறவு!
அந்த சமயம் பார்த்து கண்ணம்மா பாரதியின் வீட்டிற்குள் நுழைகிறார். இவ்வளவு நேரம் எங்கே இருந்தாய் என்று கேட்கும் போது வெளியே நின்றேன் என்று கண்ணம்மா கூறுவதை கேட்ட பாரதி, வெளி ஆள் வெளியே தான நிற்பார்கள் என்று பாரதி திமிராக சொல்கிறான். மேலும் லட்சுமி இங்கே இருக்கிறாளா என கண்ணம்மா கேட்கும் கேள்விக்கு ஆம் என்று சொன்ன பாரதி லட்சுமிக்கும் உனக்கும் என்ன உறவு என சொல்லு., இப்போவே அவளை உன்னுடன் அனுப்பி வைக்கிறேன் என்று பாரதி கண்டிப்புடன் கூறுகிறார்.
சாமி சிலை போலே பிறந்து பூமியில நடந்தாயே! – போட்டோ வெளியிட்ட ராஜா ராணி சீரியல் நாயகியால் அசந்து போன ரசிகர்கள்!!
வெளுத்து வாங்கிய பாரதி!
பாரதி கேட்ட கேள்விக்கு கண்ணம்மா எந்த பதிலும் சொல்லாத நிலையில், உண்மையை மறைக்க நினைக்கும் சௌந்தர்யா ஒவ்வொன்றாக சொல்லி சமாளிக்கிறாள். வேறு வழி இல்லாத காரணத்தினால் சௌந்தர்யாவே நீ எதுக்கு வந்துருக்க கண்ணம்மா என்று கேட்கிறார். லட்சுமி பற்றி கேட்க வந்தேன் என கூறும் கண்ணம்மாவிற்கு அடுத்த ஷாக் என்னவென்றால், லட்சுமியின் உண்மையான அம்மா அப்பா எப்போ வருவாங்க., ஒரு வாரம், ரெண்டு மாசம் இல்லை எட்டு வருஷம் எப்படி என்றாலும் இங்கே தான வரவேண்டும் என கூறுகிறார். அதுவரைக்கும் லட்சுமியை நான் யாருடனும் விடமாட்டேன் என சொல்கிறான்.
பாக்கிய லட்சுமி சீரியல் நாயகி வெளியிட்ட சூப்பரான ரீல்ஸ் – வீடியோ உள்ளே! கிளிக் பண்ணி பாருங்க!
லட்சுமியின் வருகை!
லட்சுமியுடைய அம்மா அப்பா என்னிடம் தான் அவளை பாத்துக்க சொல்லி விட்டு சென்றனர். உங்களிடம் அல்ல., மேலும் உங்கள் வீட்டு பொன்னான ஹேமாவையே உங்களால் பாத்துக்க முடியாமல் தான என்னிடம் கொண்டு வந்து விட்டீர்கள். இப்போ லட்சுமியை எப்படி பார்த்து கொள்வீர்கள் என கண்ணம்மா கேள்வி எழுப்புகிறார். இதற்கு தன்னுடைய அம்மாவிடம் நீங்கள் தான் அம்மா லட்சுமியை கண்ணம்மா வீட்டில் விட சொன்னிங்க., இப்பொழுது இந்த கேள்விக்கு நீங்க தான் பதில் சொல்ல வேண்டும் என கூறுகிறார். மேலும் இப்படிப்பட்ட சண்டை போய் கொண்டிருக்கும் போது லட்சுமி எழுந்திரித்து ஹாலிற்கு வரும் காட்சியுடன் இன்றைய காட்சியுடன் பாரதி கண்ணம்மா தொடர் முடிவடைகிறது.
டைம்ஸ் தமிழ் பேஸ்புக் பக்கத்தில் இணைய இங்க கிளிக் செய்யுங்க!!
டைம்ஸ் தமிழின் வாட்சப் குரூப்பில் இணைய இங்க கிளிக் செய்யுங்க!!