ஹேமா மற்றும் லட்சுமியை தன் பக்கம் இழுத்த வெண்பா!! – வெளியான ரீல்ஸ் வீடியோ உள்ளே!

0
30
Facebook
Twitter
WhatsApp
Telegram
Join @ Times Tamil on Telegram

பாரதி கண்ணம்மா!!

விஜய் டிவியில் புகழ்பெற்ற சீரியல் தான் பாரதி கண்ணம்மா!! கிட்டத்தட்ட லட்சக்கணக்கான மக்களால் பாக்கப்படுகிற நாடகமும் ஆகும். ஒவ்வொரு வாரத்திலும் வெளியிடப்படும் டி.ஆர்.பி யில் முதலிடத்தை பிடித்து கொண்டே இருப்பது என்னவோ பாரதி கண்ணம்மா சீரியல் தான். குழந்தை நட்சத்திரங்கள் இருந்தாலே அது படமாக இருந்தாலும் சரி., சீரியலாக இருந்தாலும் சரி ரசிகர்கள் மிகவும் விரும்பி பார்ப்பது இயல்பு!

ஹேமா மற்றும் லட்சுமி!

பாரதி கண்ணம்மா சீரியலில் இரட்டை குழந்தைகளை வைத்து சீரியல் வேற லெவலில் போய் கொண்டிருக்கிறது. அதிலும் நாடகத்தின் க்ளைமாக்ஸ் தெரிந்த பின்னரும் விறுவிறுப்பிற்கு குறையில்லாத காரணத்தினால், ரசிகர்கள் அந்த நாடகத்திற்கு அடிமை ஆகிவிட்டனர் என்றும் கூறலாம்பாரதி கண்ணம்மாவின் கதைக்களத்தைப் பொறுத்த வரை, கண்ணம்மாவின் நடத்தையின் மீது சந்தேகப்பட்ட பாரதி, அவளை வீட்டை விட்டு வெளியே அனுப்பிவிட்டான்.

பாரதி வீட்டில் லட்சுமியை விட்டு செல்லும் கண்ணம்மா! – Bharathi Kannamma Serial Today Episode 18/08/2021

கண்ணம்மாவின் கர்ப்ப காலம்!

கண்ணம்மா கர்ப்ப காலத்தில் எங்கே போகாமல் என அலைந்தததில் இருந்து தான் இந்த பாரதி கண்ணம்மா சீரியல் வேற லெவலில் பேமஸ் ஆனது. அதற்கு பிறகு தான் கண்ணம்மாவிற்கு பிறந்த இரட்டை குழந்தையில், கண்ணம்மாவிற்கே தெரியாமல் ஒரு குழந்தயை சௌந்தர்யா தூக்கி கொண்டு வந்து பாரதியிடம் கொடுத்து வளர்க்க சொன்ன கதை போன்றவை ஒளிபரப்பானது. குழந்தைகளுக்கு 8 வயது ஆன போதிலும் இந்த உண்மை கண்ணம்மாவிற்கும் பாரதிக்கும் தெரியாது என்பது குறிப்பிடத்தக்கது.

வித்தியாசமான கதைக்களம்!

பொதுவாக ஒரு நாடகத்தின் அல்லது படத்தின் க்ளைமாக்ஸ் தெரிந்து விட்டாலே நமக்கு படம் அல்லது நாடகத்தை பார்க்கும் போது அவ்வளவு சுவாரசியம் இருக்காது. ஆனால் இந்த பாரதி கண்ணம்மா சீரியல் ஒரு புதுவிதமான கதை காலத்துடன் ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. அது என்னவென்றால் டி.என்.ஏ டெஸ்ட் எடுப்பது தான் நாடகத்தின் க்ளைமாக்ஸ் என தெரிந்த பின்னரும் கூட ரசிகர்கள் மிகவும் விரும்பி பார்த்து வருகின்றனர்.

முல்லையின் வீட்டில் தங்கும் கண்ணன் ஐஸ்வர்யா! – Pandian Stores Serial Today Episode 18/08/2021

செம்ம ரீல்ஸ்!

இந்த நாடகத்தின் வில்லியாக நடிப்பவர் தான் பரினா. சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் இவர் தற்போது ரீல்ஸ் ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில் லட்சுமி ஹேமா மற்றும் வெண்பா ஆகிய மூவரும் சேர்ந்து ஒரு காமெடியான டைலாக்கை சொல்லி வேற லெவலில் ரீல்ஸ் செய்து உள்ளனர். இதை கண்ட ரசிகர்கள் நாடகத்தில் வில்லியாக இருந்தாலும் கூட., குழந்தைகளுடன் சேர்ந்து ரீல்ஸ் செய்யும் போது குழந்தையாகவே மாறிட்டிங்களே வெண்பா! என்றவாறு கருத்து தெரிவித்து வருகின்றனர்.

டைம்ஸ் தமிழ் பேஸ்புக் பக்கத்தில் இணைய இங்க கிளிக் செய்யுங்க!!


டைம்ஸ் தமிழின் வாட்சப் குரூப்பில் இணைய இங்க கிளிக் செய்யுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here