தமிழ்நாட்டு மன்மதனே வாராய்! பெண் மயங்க மயங்க நடந்து நடந்து வாராய்! – பாக்கிய லக்ஷ்மியின் காதல் மன்னன் வெளியிட்ட ரீல்ஸ் வீடியோ உள்ளே!

0
20
Facebook
Twitter
WhatsApp
Telegram
Join @ Times Tamil on Telegram

பாக்கிய லட்சுமி

பாக்கிய லட்சுமி சீரியலில் எழில் என்ற கதாபாத்திரத்தில் தன்னுடைய அல்டிமேட்டான நடிப்பை வெளிப்படுத்தி கொண்டு இருப்பவர் தான் விஜே விஷால். நாடகத்திற்குள் வருவதற்கு முன் ஒரு விஜே வாக தனது மீடியா பயணத்தை தொடங்கிய இவருக்கு பாக்கிய லட்சுமி சீரியலில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொண்ட இவர் இன்றளவில் பல இளம்பெண்களின் மனதை கொள்ளை கொண்டுள்ளார் என்பதே நிதர்சனமான உண்மை.

பிடித்த கதாபாத்திரம்!

பாக்கிய லட்சுமி சீரியலில் அனைவருக்கும் பிடித்த ஒரு கதாபாத்திரம் என்றால் அது எழில் தான். காரணம் அம்மாவின் செல்ல பிள்ளையாக நடித்து வரும் எழிலுக்கு ரசிகர்கள் கொஞ்சம் அதிகம் தான். பொதுவாக ஹீரோவாக நடிக்கும் ஒருவருக்கு அதிக ரசிகைகளும், ஹீரோயினாக வலம் வருபவர்களுக்கு அதிக ரசிகர்களும் இருப்பது வழக்கம். ஆனால் எழிலுக்கு இருக்கின்ற ரசிகைகள் எண்ணிக்கை, ரசிகர்களின் எண்ணிக்கைக்கு ஒரு போதும் குறைவில்லை.

கையை பிடி! கண்ணை பாரு! உள்மூச்சு வாங்கு! மலரும் ரொமான்ஸ்! – Pandian stores serial today episode 24/08/2021

அம்மாவின் செல்லப்பிள்ளை!

குறிப்பாக தற்போதைய காலங்களில் சோசியல் மீடியாக்களில் தேடப்படும் ஒரு நபராக எழில் இருந்து வருகிறார். பாக்கிய லட்சுமி சீரியலில், ஒரு குறும்பு தனமான கதாபாத்திரத்தில் நடித்த போதிலும் கூட, தனது அம்மாவின் மீது அதிக பிரியம் வைத்துள்ளார். பொதுவாக ஆண்களுக்கு தன்னுடைய அப்பாவை விட அம்மாவை ரொம்ப ரொம்ப அதிகமாக பிடிக்கும். இத்தகைய கதாபத்திரத்தில் தான் இன்று எழில் வாழ்ந்து வருகிறார். தன்னுடைய அம்மாவான பாக்கியா தான் எல்லாம் என்ற அளவிற்கு வேற லெவலில் நடித்து வருகிறார்.

அப்பா இல்லாத லட்சுமிக்கு என்னை அப்பாவாக்க பார்கிறாளா! இந்த கண்ணம்மா!! – Bharathi Kannamma Serial Today 24/08/2021

ஆராரிராரோ! ஆராரிராரோ!!

அண்மையில் பாக்கிய லட்சமி சீரியலில் வெளியான சில காட்சிகள் மக்களின் மனதில் அப்படியே நின்று கொண்டிருக்கிறது. தனது அம்மாவிற்கு காலில் அடிபட்ட போதிலும் கூட வீட்டில் உள்ள அனைவரும் அவரை வேலை வாங்குகிறார்கள் என்று கேள்விப்பட்ட எழில் தன்னுடைய அம்மாவை அப்படியே தூக்கிக்கொண்டு அவரது அறையில் படுக்க வைத்தார். இந்த சீனில் அம்மாவை பற்றிய ஒரு பிரபலமான பாடலான ஆராரிராரோ!! எனும் பாடலில் வருகின்ற ” உலகத்தின் பந்தங்கள் எல்லாம் நீ சொல்லி தந்தாயே! பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில் வழி நடத்தி சென்றாயே! ” எனும்வரிகள் வரும் போது இதயமே உருகி விட்டது.

தேவதை! அவள் ஒரு தேவதை! அழகிய பூமழை! – ரீல்ஸ் வெளியிட்ட பாரதி கண்ணம்மாவின் முன்னணி நடிகை!

சத்தியமா சொல்றேன்! விழுந்துட்டேன்! ஹான்!!

இந்த காட்சியை எத்தனை முறை பார்த்தாலும் பார்த்துக்கொண்டே இருக்கலாம். இந்த ஒரே காட்சியினால் லட்சக்கணக்கான ரசிகர்கள் யார் இந்த எழில்? என்று சமூக வலைத்தளங்களில் தேட தொடங்கினர். தற்போது விஜே விஷால் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அழகிய தமிழ் மகன் படத்தில் வருகின்ற தமிழ் நாட்டு மன்மதனே வாராய்!! பெண் மயங்க மயங்க நடந்து நடந்து வாராய்! என்ற பாடலிற்கு ரீல்ஸ் செய்து வெளியிட்டு உள்ளார். இதை கண்டு மயங்கி போன ரசிகர்கள்., வெறித்தனமாக ஷேர் செய்து வருகின்றனர்.

டைம்ஸ் தமிழ் பேஸ்புக் பக்கத்தில் இணைய இங்க கிளிக் செய்யுங்க!!


டைம்ஸ் தமிழின் வாட்சப் குரூப்பில் இணைய இங்க கிளிக் செய்யுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here