அருண்ராஜா காமராஜ் மனைவி மரணம்!! திரை உலகம் அதிர்ச்சி!!


நடிகரும் இயக்குனருமான அருண்ராஜா காமராஜின் மனைவி நேற்று கொரோனா தொற்றால் மரணம் அடைந்தார். சில தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். திரை உலகில் உள்ள பலரும் அவருக்கு அனுதாபம் தெரிவித்து வருகின்றனர்.

Happy Birthday Arunraja Kamaraj: From 'Ding Dong' to 'Kutti Story', five times the energetic star gave songs with powerful lyrics | The Times of India

அருண்ராஜா காமராஜ் இயக்குனர் அட்லீ இயக்கிய ராஜா ராணி படத்தின் மூலம் நடிகராக அறிமுகம் ஆனார். பின்னர் ஜிகர்தண்டா, பென்சில், தெறி மற்றும் கபாலி படங்களுக்கு பாடல்களும் எழுதியுள்ளார். அதிலும் கபாலி படத்தில் வரும் நெருப்புடா பாடல் பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பியது.

Aishwarya Rajesh, kanaa, director, Arunraja Kamaraj - Gethu Cinema

மேலும் 2018 ம் ஆண்டு சிவ கார்த்திகேயன் தயாரிப்பின் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க கனா என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆனார். தற்போது பாலிவுட்டில் ஹிட் அடித்த Article 15 என்ற படத்தை உதயநிதி ஸ்டாலினை வைத்து ரீமேக் செய்து வருகிறார்.


Tags: arunraja kamaraj latest movie, arunraja kamaraj movie, arunraja kamaraj wife dead

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: