கொரோனா தொற்று நாளுக்கு நாள் தமிழகத்தில் பரவி வரும் நிலையில் அதை சமாளிக்க மற்றும் தேவையான உபகரணங்கள் வாங்க நிதி அளிக்குமாறு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தெரிவித்து இருந்தார். இதன் அடிப்படையில் திரை பிரபலங்கள் முதல் தனியார் நிறுவனங்கள் கட்சி தலைவர்கள் பலரும் முதல்வரை நேரில் சந்தித்து நிதியை அளித்து வருகின்றனர்.
இந்நிலையில் அரசன் சோப்பின் சார்பாக 1 கோடிக்கும் அதிகமான நிதியை கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக அந்நிறுவனம் அளித்துள்ளது. இவை சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. சமீபத்தில் சென்னை சேர்ந்த ஒரு காவலாளி தன ஒரு மாத சம்பளத்தை அதாவது 10000 ரூபாயை கொரோனா நிதியாக முதல்வரிடம் வழங்கியது சமூக வலைத்தளத்தில் பெரிதாக பேசப்பட்டது.
அரசன் சோப் நிறுவனம் ஒரு கோடிக்கும் அதிகமான நிதி அளித்திருப்பது வரவேற்ற மக்கள் அதை சமூக வலைத்தளத்தில் ட்ரெண்ட் ஆக்கி வருகின்றனர். பிரபு சோப்பு ஒர்க்ஸ் நிறுவனம் கோவையில் செய்யப்பட்டு வருகிறது. அதன் உரிமையாளர் கோவையை சேர்ந்த அருண் சிங்க். இவர் மூலம் தான் தமிழகம் முழுவதும் அரசன் சோப் பிரபலம் அடைந்தது. இந்த நிறுவனம் தான் மூத்தவர் கொரோனா நிதிக்கு 1.50 கோடி ரூபாயை அனுப்பியுள்ளது. அதுவும் முதல்வரை நேரில் சென்று சந்திக்காமல் வங்கி பரிமாற்றத்தின் மூலம் இந்த பணத்தை அனுப்பியுள்ளது.