தமிழ்நாட்டில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி கட்சி அமோக வெற்றி பெற்றது. மு.க.ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றார். திருவெரும்பூர் தொகுதியில் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் நின்று வெற்றிபெற்றார். அவருக்கு பள்ளி கல்வித்துறை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கொரோனா அவசரகாலத்திற்கு 14 மாவட்டங்களுக்கு பொறுப்பாளர்களாக அமைச்சர்கள் பலர் அமர்த்தப்பட்டுள்ளனர். இதில் திருச்சி மாவட்ட பொறுப்பாளர்களாக திரு கே.என். நேரு மற்றும் அன்பில் மகேஷ் அவர்களுக்கு கொடுக்கப்பட்டது. திருச்சி திமுக கட்சி ஆபீஸிற்கு மாவட்ட ஆட்சி தலைவர், மாநகர காவல் ஆணையர் மற்றும் மாநகராட்சி ஆணையர் மற்றும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டதாக தெரிகிறது.
இந்த மீட்டிங் இந்திய இறையாண்மைக்கு எதிரானது என திருச்சி தெற்கு அதிமுக செயலாளர் ப.குமார் ஆளுநருக்கு புகார் அளித்தார். இதனால் அன்பில் மகேஷ் அவரது பதவியை விட்டு விலக வேண்டும் என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டதாக தகவல் வெளியானது.
இதற்கு பதில் அளிக்கும் வகையில் அன்பினில் மகேஷ் அவர்கள் கூறிய தகவலில் அந்த ஆலோசனை கூட்டமானது திருச்சி பொதுநல சங்க நிர்வாகிகள் கூட்டம் எனவும் அதில் தற்செயலாகவே மாவட்ட கலெக்டர், மாநகர் காவல் ஆணையர் மற்றும் மாநகராட்சி ஆணையர் வந்ததாகவும், நான் பதவி ஏற்றதற்கு வாழ்த்து தெரிவிக்க வந்ததாக தெரிவித்தார். அப்போது கொரோனா கட்டுப்பாடு ஆலோசனைகள் குறித்து விவாதித்தோம் என தெரிவித்திருக்கிறார். இதை அதிமுக தரப்பில் இருந்து அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளது மழுப்பலாகவே பார்க்கப்படுகிறது என தெரிவித்தனர்.