பிகினி உடைகளில் கர்நாடக அரசின் கொடி : அமேசான் செய்த வேலை

Amazon Canada Sells Bikini With Kannada Flag issue Details in Tamil

0
46
Facebook
Twitter
WhatsApp
Telegram

கடந்த சில நாட்களுக்கு முன் கூகுள் தேடுதல் தளத்தில் ” இந்தியாவின் மிக மோசமான மொழி எது ? என்கிற கேள்விக்கு கூகுளின் பதிலில் ” கன்னடம் ” என்று பதிவாகி இருந்ததது. இதற்கு கர்நாடகத்தில் வாழும் கன்னடத்தை தாய்மொழியாக கொண்ட மக்களும் கூகுள் நிறுவனத்தின் மீது தங்களது கண்டனங்களையும் எதிர்ப்பையும் தெரிவித்தனர். இதற்கு தங்களது தொழில்நுட்ப கோளாறே காரணம் என்று கன்னட மக்களிடம் மன்னிப்பை கேட்டு கொண்டது . அது நடந்து முடிந்த சில தினங்களுக்குள்ளேயே அமேசான் நிறுவனம் மீண்டும் கன்னட அரசை வம்பிழுத்துள்ளது என்றே சொல்லலாம்.

Amazon Canada selling bikini with Karnataka state flag colours, creates controversy | Sangbad Pratidin

பிகினி உடையில் கன்னட அரசின் கொடி :

ஆன்லைன் வர்த்தகத்தில் கொடிகட்டி பறக்கும் நிறுவனம் தான் அமேசான் இணையத்தளம். இதில் A – Z வரை எல்லா பொருட்களும் கிடைக்கும். அதாவது வீட்டுக்கு, தனிமனிதனுக்கு தேவையான எல்லா உபகரணங்களும், பொருட்களும் கிடையாகும். இப்படி பட்ட அமேசான் நிறுவனம் நேற்று ஒரு பிரச்னையை இழுத்து போட்டுள்ளனர்.

அது என்னவென்றால் கர்நாடக அரசின் கொடியை அதாவது அதன் நிறமான மஞ்சள் மற்றும் சிவப்பு நிறத்தில் கர்நாடக அரசின் சின்னத்தை பொரித்து டிசைனில் அமேசான் நிறுவனம் கனடா பிரிவில் விற்பனைக்கு காட்சி படுத்தியுள்ளது.. இது மேலும் தற்போது இது கன்னட மக்களையும், அரசாங்கத்தையும் கோபத்தின் உச்சிக்கே கொண்டு சென்றுள்ளது.

Click Here: புதிய ரேஷன் கார்டுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி? தெரிந்துகொள்வோம்!!

Karnataka Flag-themed Bikini Lands Up On Amazon Canada; Incensed Minister Threatens Action

அமைச்சர் கண்டனம் :

இதை பற்றி கருத்து தெரிவித்த கர்நாடக வனம் மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சர் லிம்பர்வல்லி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் ” கூகுள் நிறுவனத்தால் கன்னட மக்கள் அவமதிக்கப்பட்டதை நம் பார்த்தோம். அந்த வடு மறைந்து போவதற்குள் கர்நாடக அரசின் சின்னம் மற்றும் கொடியின் வண்ணத்தை பெண்களின் ஆடைகளாக அமேசான் நிறுவனம் பயன்படுத்தி இருப்பதை நாம் பார்க்கிறோம்.

பல வெளிநாட்டு நிறுவனங்கள் கன்னட மக்களையும், அரசையும் அவமானப்படுத்துவதையும் நிறுத்தவேண்டும் எனவும், கன்னட மக்கள் இதை பொறுத்துக்கொள்ள முடியாது. எனவே அமேசான் நிறுவனம் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும், இல்லையென்றால் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

ಮಹಿಳೆಯರ ಒಳ ಉಡುಪಿನಲ್ಲಿ ಕನ್ನಡದ ಬಾವುಟ; ಅಮೆಜಾನ್ ಆನ್ಲೈನ್ ಶಾಪಿಂಗ್‌ನಲ್ಲಿ ಕನ್ನಡಕ್ಕೆ ಅವಮಾನ!- Kannada Prabha

வலுக்கும் எதிர்ப்பு :

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல கன்னட அமைப்புகளும், கன்னட ரக்க்ஷ வேதிகே அமைப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்த பிகினி உடையில் “Cafe Press” என்கிற நிறுவனமே அமேசான் தளத்தில் விட்டதாகவும், அது இந்தியா வம்சாவளியை சேர்ந்த மகேஷ் ஜெயின் அவர்களது நிறுவனம் என்று கூறப்பட்டு வருகிறது.

இது போன்ற செய்திகளுக்கு எங்களது இணையதளத்தை Follow செய்யுங்கள் – Times Tamil

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here