அமேசான் ப்ரைம் மாத சந்தா பிளான் 129 இனி இருக்காது என்று அமேசான் அறிவித்துள்ளது. மேலும் பிரீ ட்ரையிலும் இனிமேல் வழங்கப்படமாட்டாது.
புதிய ரிசர்வ் வங்கி ஆணையை பின்பற்றுவதற்காக இந்த பிளான் நீக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கி புதிய வழிகாட்டு நெறி முறைகளை பின்பற்ற அறிவுறுத்தியதால் அதாவது Additional factor of Authendication(AFA ) ஐ செயல்படுத்த வேண்டும் என்று ரிசர்வ் வங்கி அறிவுத்தியுள்ளது.
இனிமேல் ஒரு மாத சந்தா பேக்கிற்கு பதிலாக மூன்று மற்றும் ஒரு வருட சந்தா பேக் மட்டுமே நடைமுறையில் இருக்கும். அமேசான் ப்ரைமிற்கான மூன்று மாத சந்தா 329 மற்றும் ஒரு வருட சந்தா 999.
இந்த புதிய வழிகாட்டு நெறிமுறைகள் 2019 ம் அந்த அறிமுகப்படுத்தப்பட்டது. வாடிக்கையாளர்கள் அசௌகரிய பட கூடாது என்பதற்காக இதனுடைய காலக்கெடு நீடிக்கப்பட்டு இந்த ஆண்டு செப்டம்பர் 30 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.