இந்தியாவில் டிஜிட்டல் மற்றும் பொழுதுபோக்கு துறைகளில் அதிக வர்த்தகம் ஈட்டி விடலாம் என்ற நோக்கில் அமேசான் புதிய சேவை ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அமேசான் நிறுவனம் காமர்ஸ் போன்ற அனேக துறைகளில் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் ஸ்ட்ரீமிங் சேவையான அமேசான் மினி டிவி என்ற சேவையை ஆரம்பித்து உள்ளது.
Youtube, Facebook போல் விளம்பரத்தின் மூலம் அதிக வருமானம் ஈட்டலாம் என்ற நோக்கில் அமேசான் இந்த சேவையை ஆரம்பித்துள்ளது. இதன் மூலம் வெப் சீரியஸ், நாடகம், காமெடி, பாடல்கள், உணவு மற்றும் லைப் ஸ்டைல் என அனைத்து வகையான வீடியோக்களும் பார்க்கலாம்.
குறிப்பிட்டு சொல்லப்போனால் இந்த சேவையை இலவசமாக அறிமுகம் செய்கிறது அமேசான். தற்போது ஆண்ட்ராய்டு ஆஃப்களில் மட்டுமே உள்ள இந்த அமேசான் டிவி உள்ளது. இன்னும் சிறிது காலத்தில் IOS ஆப்புகளிலும் இடம்பெறும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதற்காக இவர்களுடைய அமேசான் ஷாப்பிங் வெப்சைட் முதல் பக்கத்தின் கீழ் இந்த ஆப்பு கான screen உள்ளது. அதை க்ளிக் செய்யும் பொழுது அமேசான் மினி டிவி வெப்சைட்டிற்கு அழைத்துச் செல்லும் அங்கு எல்லா வகையான வீடியோக்களையும் இலவசமாக பார்த்துக்கொள்ளலாம்