![varsha-bollama-crush-social-media](/wp-content/uploads/2021/06/varsha-bollama-crush-social-media-696x373.png)
96 திரைப்பட வெற்றி :
விஜய் சேதுபதி ஹீரோவாகவும் திரிஷா, கௌரி கிஷன், வர்ஷா பொல்லமா நடித்து வெளிவந்த ஒரு காதல் திரைப்படம் பெருமளவில் அனைவரின் மத்தியில் வெற்றிப்படமாக அமைந்தது. இந்த படத்திற்கு கோவிந்த் மேனன் இசை அமைக்க, பிரேம்குமார் என்பவர் இயக்கினார். இதில் காட்டப்பட்ட பள்ளி பருவ காதல் கதை அனைவரின் வாழ்வில் நடந்த சம்பவத்தை உணர்ந்தது போல இருந்தது தான் இந்த படத்தில் மாபெரும் வெற்றிக்கு காரணம். இந்த படத்தின் வெற்றியால் இது பிற தென்னிந்திய மொழி படங்களில் ரீமேக் செய்யப்பட்டது.
![96 Photos - Download Tamil Movie 96 Images & Stills For Free | Galatta](https://1480864561.rsc.cdn77.org/assets/gallery/movie/96-13343/misc-big/96-90.jpg)
![96 Photos - Download Tamil Movie 96 Images & Stills For Free | Galatta](https://1480864561.rsc.cdn77.org/assets/gallery/movie/96-13343/misc-big/96-90.jpg)
புகைப்படக்கலைஞராக வரும் சேதுபதி :
இந்த படத்தில் வரும் முதல் பாடலான “லைப் ஆஃப் ராம்” என்கிற பாடலும் அதன் காட்சியமைப்பும் அனைவராலும் விரும்பப்பட்டது. அதில்வரும் சேதுபதி தனிமையை ரொம்ப என்ஜாய் செய்வர். அதே போல அனைவரும் சுற்றவேண்டும் என்கிற ஆசையுண்டு. அந்த படத்தில் விஜய் சேதுபதி புகைப்படக்கலைஞராக இருப்பார். அவரிடம் மாணவியாக இருப்பார் வர்ஷா பொல்லாமா. அவர் சேதுபதியை ஒரு புறமாக காதலிப்பது போன்று இருக்கும்.
![varsha bollamma: விஜய் சேதுபதியை கல்யாணம் செய்வீர்கள் என்று நினைத்தேன்.. ரசிகரின் கேள்விக்கு பதிலளித்த வர்ஷா பொல்லாமா! - actress varsha bollamma reply to fan ...](https://static.langimg.com/thumb/msid-83231707,imgsize-91896,width-700,height-525,resizemode-75/samayam-tamil.jpg)

மாணவியாக வரும் வர்ஷா :
பள்ளி பருவத்தில் மாணவியாக வரும் கௌரி கிஷனை தான் காதலிப்பார் சேதுபதி. பின்னர் சிலபல காரணங்களால் பள்ளியை விட்டு போகும் சேதுபதி. மீண்டும் தனது காதலியை சந்திக்க முயற்சிசெய்து அது தோல்வியில் முடியும். பிறகு புகைப்படக்கலைஞராக தனது வாழ்க்கையை பயணிக்கும் விஜய்சேதுபதியை அவரிடம் புகைப்படக்கலையை கற்றுவரும் வர்ஷா பொல்லாமா அவரது காதலை தெரிவிப்பார் என எதிர்பார்த்த நிலையில் விஜய் சேதுபதி அவரை திருமணம் செய்யாமல் கதை முடியும்.
ரசிகரின் உணர்ச்சிபூர்வமான கேள்வி :
இதனை படம்வந்து 3 வருடங்களுக்கு மேலான நிலையில் ரசிகர் ஒருவர் சமூக வலைத்தளத்தில் வர்ஷா பொல்லாமாவிடம் ஒரு கேள்வியை கேட்டுள்ளார். அது என்னவென்றால் “நீங்கள் தான் விஜய்சேதுபதியை படத்தின் கடைசியில் திருமணம் செய்வீர்கள் என்று எதிர்பார்த்தேன். ஆனால் அது நடக்கவில்லை. அது ஏன் அவ்வாறு மாற்றப்பட்டது?என கேள்வி கேட்டிருந்தார்
![Actress Varsha Bollamma In Saree | Cute Telugu Speech @ Chusi Chudangane Pre Release Event - YouTube](https://i.ytimg.com/vi/SVF0z1yzFiA/maxresdefault.jpg)
![Actress Varsha Bollamma In Saree | Cute Telugu Speech @ Chusi Chudangane Pre Release Event - YouTube](https://i.ytimg.com/vi/SVF0z1yzFiA/maxresdefault.jpg)
வர்ஷா பொல்லமாவின் பதில் :
இதற்கு பதில் அளித்த நடிகை வர்ஷா பொல்லாமாம், இந்த கேள்வியை அதிகபேர் என்னிடம் கேட்டுள்ளனர் எனவும் ” அந்த கதை முடிந்த விதம் தான் அந்த திரைப்படம் வெற்றிபெற்றதுக்கு முக்கிய அம்சமாக அமைந்தது எனக்கூறியுள்ளார். இந்த கேள்வி உரையாடல் வீடியோ இப்போது சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.
மிஸ் பண்ணிராதீங்க : நடிகர் விஜய்யின் மகனும், விஜய் சேதுபதி மகளும் நடிக்கும் புதிய படமா ?
இது போன்ற செய்திகளுக்கு எங்களது இணையதளத்தை Follow செய்யுங்கள் – Times Tamil
[…] […]