கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால் இந்தியாவில் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் 6 முதல் 8 வாரங்களுக்கு முழு உரடங்கு அவசியம் என்று ICMR தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள 718 மாவட்டங்களில் 540 க்கும் அதிகமான மாவட்டங்களில் தொற்று பாதிப்பு 10 % க்கும் அதிகமாக இருப்பதாக இந்திய ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.
குறிப்பாக டெல்லி, மும்பை, பெங்களூர் மற்றும் சென்னை நகரங்களில் தொற்று பரவல் வேகம் அதிகமாக இருக்கிறது. இந்நிலையில் 10 % மேல் தொற்று பாதி ப்புள்ள மாவட்டங்களில் 5 % குறைக்க முழு உரடங்கு அமல்படுத்த வேண்டும் என்று ICMR தலைவர் பல்ராம் பர்கவ் தெரிவித்துள்ளார். அதற்கு 6 முதல் 8 வாரங்களுக்கு முழு உரடங்கு அவசியம் என்றும் கூறினார். மேலும் உரடங்கை நீட்டிப்பதின் மூலம் பலன் கிடைக்கும் என்று முழுமையாக கூற முடியாது என்றும் அவர் கூறினார்.
ஏப்ரல் 15 தேதியை முழு உரடங்கை வலியுறுத்தியதாக வும் ஆனால் மத்திய அரசு முழு உரடங்கை கடைசி தீர்வாக மட்டுமே செயல் படுத்த முடியும் என்று கூறிவிட்டது.
இந்நிலையில் தடுப்பூசி, ஆக்சிசன் மற்றும் மருத்துவ தேவைகளுக்கு மத்திய அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்ற கோரிக்கை பல்வேறு தரப்பிலிருந்தும் எழுந்துள்ளது. நோய் தொற்றை கட்டுப்படுத்தும் பேராயுதம் தடுப்பூசி என்பதால் அவற்றை அதிகளவில் அனுப்ப வேண்டும் என மாநிலங்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.