தமிழகத்தில் கொரோனா தொற்றினால் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சகம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி 1 முதல் 8ம் வகுப்பு படிக்கும் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஆல் பாஸ்:
வருகிற ஜூன் 7 தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளதால் 2021 கல்வியாண்டில் 1 முதல் 8ம் வகுப்பு படிக்கும் அனைத்து மாணவர்களையும் பாஸ் செய்யும்படி அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில் எந்த ஒரு மாணவரையும் பெயில் செய்ய கூடாது என்றும், இடையிலேயே பள்ளியை விட்டு நிறுத்த கூடாது என்ற சட்டம் உள்ளது. அதன்படி 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களை பாஸ் செய்யவேண்டும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுளது. இதை மாணவர்களுக்கு தொலைபேசி அல்லது மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்த வேண்டும் என்று கூறப்பட்டு இருக்கிறது.
Must Read: மோடியிடம் முறையிட்ட 6 வயசு குழந்தை – 4 மணி நேரம் ஆன்லைன் கிளாஸ் என்னால முடியலை!!
பள்ளி திறப்பு எப்போது:
கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் பள்ளிகள் நடக்கவில்லை. ஒருசில பள்ளிகளில் மட்டும் ஆன்லைன் கிளாஸ் நடந்தது. சென்ற வருடமும் தேர்வு இல்லாமல் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றனர். இந்த முறையும் அடுத்த கல்வி ஆண்டு ஆரம்பிக்கும் தருணத்தில் உள்ளோம். ஆனால் தமிழ்நாட்டில் கொரோனா பரவல் இன்னும் குறையவில்லை. மேலும் ஜூன் 7 வரை ஊரடங்கு அமலில் உள்ளதால் இவை முடிந்தபின் கொரோனா பரவலை கண்காணித்து எப்பொழுது பள்ளிகள் திறக்கப்படும் என்ற அறிவிப்பு வரும். மேலும் மாணவர்களுக்கு வழங்க வேண்டியா பாடப்புத்தகங்கள் மற்றும் பிற நலத்திட்டங்கள் பள்ளிகள் திறந்த பின் வழங்கப்படும் என்று தெரிவித்து இருந்தனர். மேலும் 10 மற்றும் 11 படிக்கும் மாணவர்களுக்கு தேர்வு இல்லாமல் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
12ம் வகுப்பு தேர்வு:
கடந்த மார்ச் மாதம் நடக்க இருந்த 12ம் வகுப்பு பப்ளிக் எக்ஸாம் கொரோனா தொற்றினால் கடந்த அதிமுக அரசு தள்ளிவைத்தது. இந்நிலையில் புதிய அரசாங்கம் பதவியேற்ற பின் எப்பொழுது தேர்வு நடக்கும் என்று பல்வேறு தரப்பினர் கேட்டு கொண்டிருந்தனர். அதற்கு பதிலளித்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கட்டாயமாக 12ம் வகுப்பு தேர்வு நடக்கும் என்றார்.
இது போன்ற செய்திகளுக்கு எங்களது இணையதளத்தை Follow செய்யுங்கள் – times tamil