உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்காகவும் மற்றும் இங்கிலாந்தில் நடைபெறவுள்ள 5 போட்டிகளுக்காக இங்கிலாந்து சுற்று பயணத்திற்கு புறப்படும் இந்திய வீரர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அந்த பட்டியலில் இந்தியாவின் முக்கிய ஆல்ரவுண்டரான ” ஹார்திக் பாண்டியா”
பெயர் இடம் பெறவில்லை. இதனால் ரசிகர்களும் பெரும் சோகத்தில் உள்ளனர் .
இந்திய ஆல்ரவுண்டரான பாண்டியா மாற்றாக அணியில் யாருமில்லை. 2019ஆம் ஆண்டு நடைபெற்ற அறுவை சிகிச்சை காரணமாக சில காலமாக பௌலிங் வீசவில்லை. இங்கிலாந்துக்கு எதிரான போட்டியிலும்கூட சில ஓவர்கள் மட்டுமே பாண்டியா வீசியது குறிப்பிடத்தக்கது.
IPL சீசன் 14 இல் நடைபெற்ற போட்டியில் தோள்பட்டை காரணமாக பந்து வீசவில்லை. இதனால் இங்கிலாந்து சுற்று பயணத்தின்போது நடைபெறவுள்ள போட்டியில் ஹார்திக் பாண்டியாவிற்கு அணியில் இடம் கிடைக்கவில்லை. பேட்டிங் மற்றும் பௌலிங்கில் ஆல்ரவுண்டர் இடம் காலியாக உள்ளது என இந்திய அணி பௌலிங் கோச் பரத் அருண் பேட்டியளித்துள்ளார்.
இந்திய அணிக்கு ஆல்ரவுண்டர் தேவை எனவும் அதற்கு தகுதியான ஒருவர் கிடைச்சிட்டாரு. அவர் வேற யாருமில்லை நம்ம ஷார்துல் தாகூர் தான் எனவும் அவர் ஆஸ்திரேலியா போட்டியில் அதிக விக்கெட் வாங்கியுள்ளார். அதுமட்டுமில்லாமல் பிரிஸ்பேன் போட்டியில் அரைசதம் அடித்துள்ளார். எனவே பேட்டிங் மற்றும் பௌலிங்கில் கலக்கிய அவருக்கு வாய்ப்பு வழங்குவதில் தவறில்லை என கூறியுள்ளார்.
உள்ளூர் போட்டி வீரர்கள் அனைவரும் அவர்களின் திறமையின் அடிப்படையில் கண்காணித்து வருவதாகவும், விரைவில் ஆல்ரவுண்டர் பற்றாக்குறை நிரப்படும் என்றும் கூறியுள்ளார் .
இதையறிந்த ஷார்துல் தாகூர், “ஆல்ரவுண்டர் காலியிடத்தை நான் நிரப்புவேன் என்றும் என் திறமையை வளர்த்து வரும் போட்டிகளில் சாதித்து காட்டுவேன் என்றும் அறிவித்துள்ளார்.