மொபைல் போனில் பிரபலமான கேம் என்றால் அது பப்ஜி தான் . இதன் ரியாலிட்டி மற்றும் கேம் கதையமைப்பு அனைத்து தரப்பு கேம் பிரியர்களை கவர்ந்து இழுத்தது . கேமரா மற்றும் மாதலுக்காக மொபைல் வாங்கிய காலம்போய் பப்ஜிகாகவே மொபைல் மாடலைக்கேட்டு வாங்கும் அளவுக்கு பபப்ஜி உலகம் முழுதும் உள்ள கேம் பிரியர்களுக்கு வரப்பிரசாதமாக இருந்துவந்தது . இந்நிலையில் பப்ஜி கேம் விளையாட இந்திய மற்றும் பலநாடுகளில் தடை விதித்தது . முக்கியகமாக இந்தியாவில் மீண்டும் வர பப்ஜி தயாரிப்பு நிறுவனமான கிராப்டன் பலவழிகளில் முயற்சித்தது. ஆனால் எந்த பயனாயுமில்லை .
கபாலி படபாணியில் திரும்ப வந்துட்டேனு சொல்லு என்பது போல என்ற பெயரில் மீண்டும் இந்தியாவுக்குள் வருவதை கிராப்டன் நிறுவனம் அறிவித்தது. இதற்கு முன் சீன நிறுவனமான டென்சென்டுடன் இணைந்து வெளியான காரணத்தினால் மட்டுமே இந்தியாவில் தடை செய்யபட்டது குறிப்பிடத்தக்கது.
இதனை நன்கு புரிந்து கொண்டு டென்சென்ட் நிறுவனத்திடம் இருந்த தொடர்பை நீக்கி கொண்டு இந்தியாவில் “பேட்டில் கிரவுண்ட் மொபைல் இந்தியா “என்ற பெயரிலும் மற்றும் முற்றிலும் புதிய பயனாள் தரவுகளோடும், இந்தியா ரூல்ஸ், சேமிப்பு வெளிநாடுகளுக்கு பகிரப்படாது என்கிற நிலைப்பாடோடும் இந்தியாவில் வரவிருக்கிறது இந்த செய்தியை கேள்விப்பட்டதில் இளைஞர்கள் படு குஷியில் உள்ளனர் .
இந்தியாவிற்குள் வரப்போவதாக அறிவித்த கிராப்டன் நிறுவனம் இன்னும் பப்ஜி அப்டேட்டை இன்னும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதே நேரத்தில் சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் பப்ஜி விளையாட்டில் நேரத்தை விரயமாக்காமல் பயனுள்ள வேலைகளில் ஈடுபடவேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர் .